தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் ராஜ்கிரண். இவர் ஹீரோக்களுக்கு அப்பா, சித்தப்பா போன்ற முக்கிய மற்றும் குணத்திர கதாபாத்திரங்களில் நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்துள்ளவர். ஆனால் ராஜ்கிரண் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்த பல படங்கள் வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இவர் நடித்த ராசாவின் மனசினிலே படம் அதிரபுதிரி ஹிட் அடித்து இவருக்கு பெரிய பெயரை வாங்கி தந்தது அதன் பிறகு படங்களில் நடித்த வண்ணமே இருக்கிறார் இதோடு மட்டுமல்லாமல் திரைப்பட விநியோஸ்தகராகவும் ராஜ்கிரன் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நடிகர் ராஜ்கிரன் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ராஜ்கிரனுக்கு சினிமாவின் மீது அதிகம் ஆர்வம் இருந்தது அதனால் ஒரு கட்டத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது இருந்தாலும் முதல் படம் நடித்தால் அதற்கு இளையராஜா தான் இசை அமைக்க வேண்டும் என உறுதியாக இருந்தாராம் ஆனால் அப்பொழுது இளையராஜாவிடம் அவ்வளவு எளிதில் வாய்ப்பு..
வாங்கிட முடியாது அதற்கு பிரசாந்த் ஸ்டூடியோ வாசலில் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் காத்திருக்க வேண்டும் ஆனால் இளையராஜாவும் ராஜ்கிரனும் அப்பொழுது நண்பர்களாக இருந்ததால் ராஜ்கிரனுக்கு நடிக்க ஆசை இருந்தது தெரிந்தும் இளையராஜா அதற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டாராம்..
இயக்குனர் கஸ்தூரிராஜா என் ராசாவின் மனசிலே திரைப்படத்தை இயக்கியுள்ளார் ராஜ்கிரன் நடித்து வந்தார் இந்த திரைப்படம் துவங்கி அனைத்து திரைப்படங்களிலும் அற்புதமாக நடித்து வந்தார் ராஜ்கிரன் படங்களில் வரும் காட்சிகளிலேயே அவர் நல்லி எலும்பு சாப்பிடும் காட்சியை மிக பிரபலம் அந்த காட்சி எடுக்கும் பொழுது எளிமையாக எடுத்து விட்டனர் ஆனால் டப்பிங் செய்யும் போது அதை சரியாக செய்ய முடியவில்லை எனவே அந்த காட்சியை எடுத்த விடலாம் என படக்குழு..
முடிவு செய்தது அப்பொழுது டப்பிங் இருந்த ராஜ்கிரன் வேகமாக தன்னிடம் இருந்து பேனாவை எடுத்து வாயில் வைத்து கடித்து நொறுக்கி அதை ரெக்கார்டு செய்து எலும்பு காட்சியில் சேர்க்க சொன்னார் அந்த சத்தம் அப்படியே எலும்பு கடிக்கும் காட்சிக்கு ஏற்றார் போல இருந்தது அந்த அளவிற்கு சினிமாவின் மீது ஈடு கொண்டவர் ராஜ்கிரன் என்பது குறிப்பிடத்தக்கது.