மிரட்டலாக உருவாகும் ரஜினியின் “ஜெயிலர்”..! படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்.

rajini
rajini

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து ஓடுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் திரை உலகில் 40 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறார் இப்பொழுது முன்னணி நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் ரஜினியும் ஒரு வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசத்தி வருகிறார்.

இளம் இயக்குனர் நெல்சன் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 169 வது திரைப்படத்தில் ரஜினியின் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் இருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது அதிலும் அண்மையில் வெளிவந்த ரஜினியின் போஸ்டர் வேற லெவலில் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஜெயிலர் படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து சிவராஜ் குமார், பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி யோகி பாபு, தமன்னா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஒரு முக்கிய இடத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

அதிலும் எடுத்த உடனேயே போலீஸ் ஸ்டேஷன் போன்ற  ஒரு செட் அமைக்கப்பட்ட எடுத்த வருவதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார் மலையாள நடிகரான விநாயகன் தான்.. பிரபலமான நடிகர் இவர் ஏற்கனவே தமிழில் விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் நடித்தவர்.

vinayakan
vinayakan

என்பது குறிப்பிடத்தக்கது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இந்த செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது.