40 வருடங்களுக்கு மேலாக திரை உலகில் நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்த பொழுதிலும் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது அதனை தொடர்ந்து நெல்சன் திலிப் குமாருடன் முதல்முறையாக கூட்டணி அமைத்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கொச்சி மற்றும் பல முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது அதனைத் தொடர்ந்து தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கம் லால் சலாம் திரைப்படத்தில் ஒரு சேமியா ரோல் பண்ண உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி திரையுலகில் வெற்றி நடிகராக ஓடும் ரஜினி எப்பொழுதுமே கமர்சியல் படங்களில் நடிப்பது வழக்கம்..
ஏனென்றால் ரஜினிக்கு எமோஷனல் ஆக்சஷை தாண்டி அவருக்கு காமெடியும் வரும் இதனால் தான் அவருடைய பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாக இருக்கின்றன. ஆனால் ஒரு சில காமெடி நடிகர்களுடன் அதிகம் படம் பண்ணி உள்ளார் அந்த வகையில் காமெடி நடிகர் ஜனகராஜ் உடன் இணைந்து படிக்காதவன், ராஜாதி ராஜா, பாண்டியன், பாட்ஷா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவருடைய காமெடியை பார்த்தாலே ரஜினிக்கு சிரிப்பு வந்துவிடுமாம். இவரைப் போலவே செந்திலின் காமெடியை பார்த்தாலே ரஜினிக்கு ரொம்ப பிடிக்குமாம். மேலும் காமெடிட் நடிகர் செந்திலின் குரல் அவருக்கு ரொம்ப பிடிக்கும் என கூறப்படுகிறது.
செந்தில் உடன் ரஜினி கைகோர்த்து நடித்த படங்கள் வீரா, முத்து, அருணாச்சலம், படையப்பா என பல படங்களில் ரஜினியும் செந்திலும் நடித்து அசத்தினர் ரஜினிக்கு ரொம்பவும் பிடித்த காமெடி நடிகர் ஜனகராஜ் மற்றும் செந்தில் தான் என கூறப்படுகிறது இவர்களுக்கு அடுத்து வேணால் ஒரு சில காமெடி நடிகர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.