தமிழ் சினிமாவில் இன்று நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது கூட வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் தனது 169 திரைப்படமான ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி விறுவிறுப்பாக நடித்து வருகிறார் படத்தின் இறுதி கட்டப் படபிடிப்பு போய்க்கொண்டு இருக்கிறது. இப்படி பிஸியாக ஓடும் ரஜினி..
சமீபத்தில் மீனா 40 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அப்பொழுது மேடை ஏறிய ரஜினி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. வாழ்க்கையில் நான் மிகவும் நேசித்த நடிகைகள் இரண்டு பேர் தான் அவர்கள் பெயர் சொன்னால் கூட இங்கே இருக்கும் மற்ற நடிகைகள் கோபப்பட மாட்டார்கள் என சொல்லி ஆரம்பித்தார்.
ரஜினி விரும்பிய நடிகைகள் ஸ்ரீதேவி மற்றும் மீனாவாம் இருவருமே குழந்தை நட்சத்திரமாக அவர்களின் சினிமா பணத்தை தொடங்கியவர்கள் ரஜினியுடன் எங்கேயோ கேட்ட குரல் படத்தின் மூலம் அறிமுகமானார் மீனா அப்பொழுது அவருக்கு ஏழு வயது அதன் பிறகு அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போது அமுல் பேபி மாதிரி சப்பியாக பண்ணு மாதிரி இருந்தார் என மேடையில் ரஜினி கூறினார். தொடர்ந்து பேசிய அவர் நீண்ட வருடங்களுக்குப் பிறகு எஜமான் படத்தில் ஜோடி சேர்ந்தனர்.
அப்பொழுது ரஜினி ஹீரோயின் யார் என்று கேட்டனர் மீனா தெரிந்ததும் ஷாக் ஆகிவிட்டாராம் என்னுடன் குழந்தையாக நடித்தவரையே எனக்கு ஹீரோயினாக நடிக்க சொல்லுகிறீர்களே என ரஜினி கேட்டாராம் அப்பொழுது தெலுங்கில் ஏற்கனவே மீனா நடித்த இரண்டு படங்களின் பாடல்களை போட்டு காண்பித்துள்ளனர். அதைப் பார்த்ததும் ரஜினிக்கு ஒரே ஷாக்காாம் அந்த அமுல் பேபி இது.? என்று ரஜினி கேட்டாராம் அதன் பிறகு ரஜினியின் வீரா, முத்து என ஜோடி சேர்ந்து மீனா நடித்த ரஜினியின் படையப்பா கதையை சொல்லி இருக்கின்றனர்..
மீனாவோ நீலாம்பரி கேரக்டரை நான் தான் பண்ணுவேன் என ரஜினியிடம் கூறி இருக்கிறார் அதற்கு ரஜினி அது உனக்கு சரி வராது வேண்டுமென்றால் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடி என சொல்லி இருக்கிறார் ஆனால் மீனா அடம்பிடித்தாராம் பின் ரஜினி கே எஸ் ரவிக்குமாருடன் சொல்லி மீனாவை சமாதானம் செய்து வைத்து ரம்யா கிருஷ்ணன் நடிக்க வைத்தாராம்.. இந்த கதையை சொல்லிவிட்டு ரஜினி இப்பொழுது கூட அந்தப் படையப்பா படம் சம்பவத்தால் என் மீது கோபத்தில் தான் இருப்பார் எனக்கு தெரியும் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று ரஜினி பேசினார்.