மாமன்னன் திரைப்படத்தை பார்த்துவிட்டு ரஜினி கொடுத்த விமர்சனம்..! இன்ப அதிர்ச்சியில் படக்குழு

mamannan
mamannan

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின் அதன் பிறகு காமெடி கலந்த நல்ல நல்ல படங்கள் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் திடீரென தனது டிராக்டை மாற்றினார். பெரிதும் சமூக அக்கறை உள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அப்படி இவர் நடித்த மனிதன், கண்ணே கலைமானே போன்ற படங்கள் வெற்றி பெற்றதை தொடர்வது மாரி செல்வராஜ் உடன் கூட்டணி அமைத்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்தார். இந்த படமும் சமூகத்திற்கு தேவையான ஒரு படமாக உருவானது படம் ஜூன் 29 ஆம் தேதி வெளியானது படத்தின் ஒவ்வொரு காட்சியும் சிந்திக்கும்படி இருந்ததால்..

சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர் மேலும் இந்த படம் உதயநிதி கடைசி படம் என்பதாலும் பலரும் பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் கைகோர்த்து பகத்வாசையில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ரவீனா ரவி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்த அசத்தி உள்ளனர்.

குறிப்பாக வடிவேலுவின் மாறுபட்ட நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தது சினிமா பிரபலங்கள் கூட இந்த படத்தை பார்த்து வடிவேலுவை புகழ்ந்து பேசி வருகின்றனர் உலகநாயகன் கமலஹாசன் வெற்றிமாறனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்..

சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என ரஜினி தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.