Leo : 2023 நடிகர், நடிகைகளுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது அந்த வகையில் அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்கள் போல சின்ன , பெரிய பட்ஜெட் வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்போ வெளிவந்த ரஜினியின் ஜெயிலர் திரைப்படம்.
இதுவரை மட்டுமே 550 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படங்களை தொடர்ந்து விஜயின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது பலரும் ரிலீசுக்கு முன்பு 500 கோடி பார்த்துவிட்டது.
ரிலீஸ் ஆகி 1000 கோடி கன்ஃபார்ம் 1500 கோடி கன்ஃபார்ம் என படத்திற்கான ஹைஃபை ஏத்தி வருகின்றனர் ஆனால் வெளி வந்தால்தான் என்ன நிலவரம் என தெரியும் இதே போல ரஜினி நடித்த ஒரு படத்திற்கு மிகப்பெரிய ஹைப்பிருந்தது. இந்த படம் வெளி வந்தால் பெரிய வசூலை அள்ளும் என அப்பொழுது கணக்கிடப்பட்டது.
ஆனால் அந்த படம் வெளிவந்து தோல்வியை சந்தித்தது அந்த படம் வேறு எதுவும் அல்ல பாபா திரைப்படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களே முன்வந்து இந்த படம் கோடி கணக்கில் வசூல் செய்வது உறுதி அடுத்த லெவலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி போகப்போகிறார் என பேச்சுக்கள் எகிறின.
ஆனால் படம் வெளிவந்து மோசமான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்திற்கும் தற்பொழுது ஹைப் அதிகமாக ரசிகர்கள் ஏற்றிவிட்டனர் படம் நன்றாக இருந்தால் ஆயிரம் கோடி வசூலை தாண்டும் ஆனால் படம் சற்று சொதப்பினாலும் கூட அதள பாதாளத்திற்கு போய்விடும். பொறுத்திருந்து பார்ப்போம் நடிகர் விஜயின் “லியோ” மாஸ் காட்டுமா.? காட்டதா.?