விஜயின் கோட்டையில் மாஸ் காட்டிய ரஜினியின் “ஜெயிலர்” – இப்படி ஒரு சாதனையா.?

Jailer
Jailer

Jailer : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 40 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறார் இவர் தற்போது வயது முதிர்வின் காரணமாக வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த படங்கள் சுமாராக கூடியதால்..

வெற்றி படத்தை கொடுக்க நெல்சன் உடன் கைகோர்த்து ரஜினி நடித்த திரைப்படம்  ஜெயிலர். ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக உலகம் முழுவதும் வெளியானது. படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், சுனில் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்தனர்.

படம் ஆக்சன், எமோஷனல், காமெடி என அனைத்தும் இருந்தாலும் அதையும் தாண்டி ரஜினியின் மாறுபட்ட நடிப்பு, விநாயகத்தின் ரவுடிசம், மாஸ் என்ட்ரி என அனைத்தும் சிறப்பாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஜெயிலர் படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதுவரை ஜெயிலர் திரைப்படம் வெளியாகி சுமார் 550 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஜெயிலர் படம் வெளியாகி பல்வேறு இடங்களில் புதிய வசூல் சாதனையையும் படைத்து வருகிறது அந்த வகையில் கேரளாவில் படம் வெளியாகி  50 கோடி வசூல் அள்ளி இருக்கிறதாம்.

விஜயின் கோட்டையாக கருதப்படும் கேரளாவில் ரஜினி தற்பொழுது மாஸ் காட்டி வருகிறார். வருகின்ற நாட்களிலும் ஜெயிலர் படத்தின் அங்கு வசூல் குறைய போவதில்லை. இதனை லியோ திரைப்படம் முறியடிக்கமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்