1000 நாட்கள் கடந்து ஓடிய ரஜினியின் படம்.? அதன் பின் எந்த ஒரு படமும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்த வில்லையாம்.

rajini
rajini

தமிழ் சினிமா உலகில் புதுமுக நடிகர்களின் வரவேற்பு அதிகமாக இருந்தாலும் தமிழ் சினிமாவை ஆட்சி செய்வது என்னவோ முன்னணி நடிகர்கள் தான். சினிமாவுலகில் இப்பொழுது ஒரு படம் வெளியாகி 50 நாட்களைக் கொண்டது பெரிய விஷயமாக இருக்கிறது. சொல்ல போனால் ஒரு படம் 25 நாட்களை கடந்து ஒரு படம் ஓடினால் அது வெற்றி படமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் ஒரு சில திரைப்படங்கள் அப்படி ஒரு சாதனையையும் செய்கின்றன அந்த வகையில் அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம்  விமர்சன ரீதியாகவும்,  வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று அசத்தியது இந்த திரைப்படம் மட்டும் தான்.

சமீபத்தில் வெளியான திரைப்படங்களிலேயே அதிக நாட்கள் ஓடிய மக்களை மகிழ்வித்த திரைப்படம். கர்ணன் படம் 100 நாட்கள் ஓடியதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற ஒரே ஒரு திரைப்படம் மட்டும் 1000 நாட்கள் ஓடி அசத்தியுள்ளது அந்த திரைப்படம் வேறு எதுவுமல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான சந்திரமுகி திரைப்படம் தான்.

2005ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அப்பொழுது வெளியாகி தொடர்ந்து மூன்று வருடங்கள் ஓடி வசூல் சாதனை படைத்தது. ரஜினிக்கு இந்த திரைப்படம் ஒரு மறக்க முடியாத படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பி. வாசு வேற லெவலில் இயக்கியிருந்தார் இந்த படத்தில் காதல், செண்டிமென்ட், ரொமான்ஸ், திரில்லர் என அனைத்தும் கன கச்சிதமாக பொருந்தி இருந்தது குறிப்பிடதக்கது.

இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு, நாசர், மாளவிகா, புன்னகை அரசி விஜயா மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து இருந்தனர் இந்த திரைப்படம் தொடர்ந்து 1000 நாட்களுக்கு மேல் ஓடி சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.  அன்பின் எந்த ஒரு படமும் இப்படி அதிக நாள் ஓடியதே கிடையாதாம்.