தேவயானியிடம் நகுல் பேசாததற்கு காரணம் ரஜினியின் மகள்கள் தான்.! என புது சர்ச்சையை கிளப்பிய தேவயானியின் கணவர் ராஜ்குமாரன்..

devayani

சினிமாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது அவரவர்களுடைய முடிவு அந்த வகையில் 80,90 காலகட்டத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பு திறமையினால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை தேவயானி. இவர் இயக்குனர் ராஜகுமாரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு திருமணமாகி 21 வருடங்களாகியும் தற்பொழுது வரையிலும் நடிகை தேவயானியின் தம்பி நாகுல் அவர்களுடன் பேசாமல் இருந்து வருகிறாராம்.

இது குறித்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரிடம் இணை இயக்குனராக பணியாற்றி வந்தவர் தான் ராஜகுமாரன். இவர் சூரியவம்சம் திரைப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது தான் நடிகை தேவயானியின் மீது காதல் மலர்ந்துள்ளது அதன் பிறகு இயக்குனராக அவகாரம் எடுத்த ராஜகுமாரன் தான் இயக்கம் திரைப்படங்களில் தொடர்ந்து தேவயானி நடிக்க வைத்து வந்தார்.

பிறகு இவர்கள் காதலிக்க தொடங்கியுள்ள நிலையில் இது குறித்து அவர்களுடைய குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது எனவே அவர்கள் குடும்பம் இதனை எதிர்த்து வந்த நிலையில் கடந்த 2001ஆம் ஆண்டு நடிகை தேவயானி ராஜகுமாரன் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். அந்த நிலையில் இவர்கள் திருமணம் செய்து கொண்ட காலகட்டத்தில் தேவயானி வீட்டின் சுவர் ஏறி குதித்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது. ‌

devayani
devayani

திருமணத்திற்கு பிறகு பெரிதாக நடிகை தேவயானிக்கு திரைப்படங்களின் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சீரியல்களில் நடிப்பதை தொடர்ந்தார் அந்த வகையில் கோலங்கள் என்ற சீரியல் இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இப்படிப்பட்ட நிலையில் தேவயானிக்கும் ராஜகுமாரனுக்கும் திருமணமாகி தற்போது வரையிலும் 21 ஆண்டுகள் இருந்து வரும் நிலையில் தற்போது வரையிலும் நடிகை தேவயானியின் தம்பி நாகுல் அவர்களுடன் பேசாமல் இருந்து வருகிறாராம்.

இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் ராஜகுமாரன் நகுல் தங்களுடன் பேசாததற்கு காரணத்தை கூறியுள்ளார் அதில் அவர் கூறியதாவது நடிகர் ரஜினிகாந்தின் மனைவி நடத்தி வரும் பள்ளியில் தான் நகுல் பயின்றதாகவும் இதன் மூலம் ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யாவும், சௌந்தர்யாவும் நகுலின் நெருங்கிய நண்பர்கள் என்றும் தெரிவித்த ராஜகுமாரன் தேவயானி என்னை திருமணம் செய்து கொண்ட போது ரஜினியின் மகள்கள் நகுலை கிண்டல் செய்ததாகவும் அதனை  அவமானமாக எண்ணி தான் நகுல் இன்னும் தன்னிடம் பேசாமல் இருந்து வருவதாக கூறியுள்ளார்.