ரசிகர்கள் மேல் ரஜினிக்கு இருக்கும் அந்த அக்கறை..! சூர்யா, ஜோதிகாவிற்கு இல்லை..

rajini
rajini

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் நடிகைகள் பலரும் படங்களில் நடிப்பதை தவிர்த்து இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பன்முகம் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இது போக பல தொழில் நிறுவனங்கள் விளம்பரங்கள் போன்ற பலவற்றிலும் காசு பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பல பிரபல நடிகர் நடிகைகளாக இருப்பவர்களை தேர்வு செய்து அவருக்கு ஒரு தொகையை கொடுத்து விளம்பரங்களில் நடிக்க வைக்கின்றன. அப்படி பல நடிகர் நடிகைகளும் அந்த விளம்பரங்களில் நடித்தும் வருகின்றனர் இதன் மூலம் மக்கள் மற்றும் அந்த நடிகர்களின் ரசிகர்கள் பலரும் தனக்கு பிடித்தவர்கள் சொல்கிறார்கள் என்பதால் உடலுக்கு தீங்கான உணவு பொருட்கள் போன்றவற்றையும் வாங்குகின்றன.

இதன் மூலம் அவர்கள் பாதிப்படைகின்றனர். இதனை நன்கு உணர்ந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் இது போன்ற எந்த ஒரு விளம்பரங்களிலும் நடிக்க முன்வர மாட்டார் அவர் தனது ரசிகர்கள் தான் எனக்கு முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார். அண்மையில் கூட ஒரு கார் நிறுவனம் ஒன்று ரஜினிக்கு பெரிய தொகையை கொடுத்து.

அவர்களது விளம்பரத்தில் நடிக்க சொன்னது ஆனால் ரஜினி அதனை மறுத்துவிட்டார். ஆனால் இதற்கு மாறாக சிவகுமாரின் இரண்டு மகன்கள் ஆன சூர்யா மற்றும் கார்த்தி மருமகள் ஜோதிகா போன்றவர்கள் காபி விளம்பரத்தில் நடித்து காசு பார்த்து வருகின்றனர். மேலும் சிவகுமாரின் குடும்பத்தில் யாருக்கும் காபி குடிக்கும் பழக்கம் இல்லை என கூறப்படுகிறது.

இருந்தாலும் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சன் ரைஸ் காபி விளம்பரத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் சூர்யா இந்த விளம்பரத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் டப்பிங் பேசுவது மற்றும் காபி விளம்பரத்திற்கு நான்கு வரி பாடல்களையும் பாடியுள்ளார். இப்படி சினிமாவை விட விளம்பரத்தில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் சூர்யா இதனால் அவரது ரசிகர்களும் அந்த விளம்பரத்தை மிக ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.