“லால் சலாம்” திரைப்படத்தில் ரஜினி கதாபாத்திரம்.? டோட்டலாக மாறும் சூப்பர் ஸ்டார்.. வா தலைவா உன்னை இப்படி பார்த்து பல வருஷம் ஆச்சு

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக  ஓடிக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் தற்பொழுது நெல்சன் உடன் கூட்டணி அமைத்து “ஜெயிலர்”  படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது அதை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் கூட ஜெயிலர்  படப்பிடிப்பு தளத்திலிருந்து  ஸ்டண்ட் காட்சிகள் புகைப்படங்கள் லீக்காகி பெரிய அளவில் வைரலாகின.

படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து மலையாள டாப் ஹீரோ மோகன்லால், கன்னட டாப் ஹீரோ சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, தமன்னா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள்  நடித்து வருகின்றனர். படத்தின் இறுதி கட்ட சூட்டிங் தொடர்ந்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லால் சலாம் தேவைப்படத்தில் நடிக்கிறார்.

மேலும் லைக்கா நிறுவத்துடன் இன்னொரு படம் பண்ணிருக்கிறார் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அந்த படத்தை ஜெய் பீம் படம் இயக்குனர் தான் இயக்க உள்ளார் என தகவல்களும் உறுதி செய்யப்பட்டுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் இன்னொரு தகவல் ரஜினி ரசிகர்களை குஷி பிடித்து உள்ளது அதாவது லால் சலாம் திரைப்படத்தில் ரஜினி எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்பதுதான்..

லால் சலாம் திரைப்படம் முழுக்க முழுக்க  கிரிக்கெட்டை மையமாக வைத்து தான் உருவாகப் போகிறது இதில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர்கள் முதன்மை கதா மாத்திரத்தில் நடிக்கின்றனர். ரஜினி இந்த படத்தில் கெஸ்ட் ரோல் நடிக்க இருக்கிறார் என ஏற்கனவே சொல்லப்பட்டது உண்மைதான்..

ஆனால் இந்த படத்தில் ரஜினி ஒரு முஸ்லிம் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறாராம் இதற்காக தற்போது ரஜினியை தாடி வளர்த்து வருகிறார் என சொல்லப்படுகிறது. லால் சலாம் திரைப்படத்தில்  ரஜினி  கெஸ்ட் ரோலில் நடித்தாலும் இந்த கதாபாத்திரமா அவருக்கு ஒரு வைட்டான கதாபாத்திரமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Leave a Comment