Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபா. படத்தில் ரஜினியுடன் இணைந்து மனிஷா கொய்ராலா, விஜயகுமார், எம் என் நம்பியார், கவுண்டமணி, ரம்யா கிருஷ்ணன், நாசர், சங்கவி, ராதாரவி, தீபிகா வெங்கட், சுஜிதா, ரியாஸ் கான், சரத் பாபு என மிகப் பெரிய திரை பட்டாளமே நடித்திருந்தது.
இந்த திரைப்படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் எப்படி அப்பொழுது எதிர்பார்த்தார்களோ அதே அளவிற்கு ரஜினியும் எதிர்பார்த்தார். ஏனென்றால் இந்த படத்தில் ரஜினி ரொம்ப சந்தோஷமாகவும் விறுவிறுப்பாகவும் நடித்திருந்தார் என்பது சொல்லப்படுகிறது. படத்தை பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்திருந்தனர். ஆனால் படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று படம் ஓடியது.
அந்த நல்ல உள்ளத்திற்கு ஒன்னும் ஆகாது.. விஜயகாந்த் ஆரோக்கியத்துடன் வீடு திரும்புவார் – பிரபல நடிகர்
அப்பொழுது பெரிய வசூல் சாதனை படைக்கவில்லை ஆனால் தொலைக்காட்சிகளில் பாபா படம் ரிலீஸ் செய்யப்பட்ட பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பாபா திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவினாலும் சில சாதனைகளையும் நிகழ்த்தி இருக்கிறது அதாவது முதலில் இந்த படத்தை பிரமோஷன் செய்ய ரஜினி ஒரு முடிவெடுத்தார்.
அதாவது இந்த போஸ்ட் கார்டுகள் வழியாக விளம்பரப்படுத்தினால் நன்றாக இருக்குமே என ரஜினிகாந்த் நினைத்து இது குறித்து இந்திய தபால் துறையிடம் பேசியதாக கூறப்படுகிறது இதை பரிசீலனை செய்த தபால் துறை ஒரு கார்டுக்கு 50 பைசா நாம் மக்களிடம் வாங்குகிறோம் அதற்கு பதிலாக இந்த 50 பைசாவை விளம்பரதாரிடம் பெற்றுக் கொண்டு மக்களுக்கு 25 பைசாவை பெற்றுக் கொண்டால்..
அஜித் செய்யும் பிரியாணிக்கு நான் அடிமை.. பிரபல நடிகரின் பேச்சால் குஷியான ரசிகர்கள்
அது லாபம் தானே என யோசித்த தபால் துறை அதன்படி மேகதூத் போஸ்ட் கார்டு என்னும் புதிய அஞ்சல் அட்டையை அறிமுகப்படுத்தியது. அந்த ஆட்டை பிரிண்ட் செய்யப்படும் போது விளம்பரத்துடன் பிரிண்ட் செய்யப்பட்டு 25 பைசாவுக்கு விற்கப்பட்டது ஆனால் அதன் உண்மையான மதிப்பு 50 பைசாவாகும்..
அப்படி இந்தியாவில் முதன் முதலாக போடப்பட்ட அஞ்சல் அட்டை பாபா அஞ்சல் அட்டையாகும் அதன் பிறகு பல நிறுவனங்கள் அதை பயன்படுத்தி தன்னுடைய நிறுவனங்களை விளம்பரப்படுத்தினர். முதன் முதலில் பாபா படத்திற்கு தான் அதன் பிறகு ரஜினியின் சந்திரமுகி படத்திற்கும் இதுபோல விளம்பரப்படுத்தப்பட்டது. இதோ நீங்களே பாருங்கள்.