தளபதி விஜய் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் திரைக்கு வந்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும் நெல்சன் விஜயை வைத்து செய்துவிட்டார் என பெரும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் மிகப்பெரிய நடிகர் விஜய் அவரை வைத்து எது போல் படம் கொடுக்கவேண்டும் என நெல்சனுக்கு தெரியாதா என பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பீஸ்ட் திரைப் படத்திற்கு போட்டியாக KGF இரண்டாவது பாகம் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியானது. KGF இரண்டாவது பாகத்துக்கு ரசிகர்களிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது அதனால் இந்த திரைப்படத்திற்கு திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் பீஸ்ட் திரைப்படத்திற்கு திரையரங்குகள் குறைக்கப்பட்டுள்ளன என தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் பீஸ்ட திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களை வைத்து 169 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ட்ரெண்ட் ஆனது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் சன் டிவி ஆபீஸில் பீஸ்ட் திரைப்படத்தைப் பார்த்து உள்ளதாக கூறப்படுகிறது படத்தை பார்த்த ரஜினி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துள்ளார் மேலும் நெல்சனை 169 திரைப்படத்தை இயக்க வைக்குமா அல்லது இயக்குனரை மாற்றலாமா என பெரும் யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
எது எப்படியோ ரஜினிக்கே நெல்சன் பயத்தை காட்டிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.