ரஜினி அதிகம் விரும்பி பார்க்கும் 3 படங்கள் – லிஸ்ட்டில் இடம்பெற்ற கமல் படம்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில் நடிப்பதையும் தாண்டி சிறந்த படங்களை கொண்டாடுவது அதே சமயம் அந்த படத்தில் நடித்த நடிகர் இயக்குனரையும் மனதார வாழ்த்துவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இதுவரை வெண்ணிலா கபடி குழு, வரலாறு, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இப்ப கூட மாதவனின் ராக்கெட்ரி போன்ற பல படங்களை புகழ்ந்து பேசியுள்ளார்.

ரஜினி இப்பொழுது இருக்கும் இளம் தலைமுறை நடிகர்களை மட்டும் பாராட்டுவது இல்லை இதற்கு முன்பாக தனக்கு போட்டியாளராக இருக்கும் நடிகர் கமலின் படங்களை கூட இப்பொழுது பார்த்து பிரமித்து அவரை கூப்பிட்டு பாராட்டியும் இருக்கிறார். அந்த வகையில் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ராஜ பார்வை படத்திற்கு பிறகு இரண்டாவதாக அபூர்வ சகோதரர்கள் படத்தை எடுத்து அசத்தியது இந்த படத்தை அனைவரும் பார்த்து கொண்டாடினார்

ரஜினியும் இந்த படத்தை இரவு 11 மணிக்கு பார்த்து முடித்துவிட்டு உடனடியாக கமல் வீட்டுக்கு சென்று உள்ளாராம் அப்பொழுது மணி இரண்டு முப்பதாம் கமலை ஏற்பட்டு உனக்கு மரணமே இல்லை எனக் கூறி கட்டிப்பிடித்துக் கொண்டாராம். ஆனால் ரஜினிக்கு இந்த படத்தை விட ரொம்ப ரொம்ப பிடித்த மூன்று திரைப்படம் வேற என கூறப்படுகிறது

அந்த வகையில் ரஜினி நல்ல திரைப்படங்கள் வராத சமயத்தில் இந்த மூன்று திரைப்படங்களை மட்டும் அடிக்கடி பார்ப்பது வழக்கம் அந்த வகையில் கமல் நடித்த ஹேராம் திரைப்படத்தை மட்டுமே 30 அல்லது 40 முறை பார்த்திருப்பார் என கூறப்படுகிறது ஒவ்வொரு முறையும் பார்க்கும் பொழுது புது புது விஷயங்களை தான் அறிந்து கொண்டதாகவும் அந்த படம் பார்ப்பது ஒரு தவம் என்றும் ரஜினி ஒரு மேடை ஒன்றில் பேசி உள்ளார்.

முதலாவதாக கமல் ஹேராம், இரண்டாவதாக சிவாஜி நடித்த திருவிளையாடல், மூன்றாவதாக ஆங்கில படமான காட் பாதர்  இந்த மூன்று படங்களும் ரஜினியின் பேவரட் திரைப்படங்கள். ரஜினிக்கு போர் அடித்தால் அல்லது நல்ல படம் வரவில்லை என்றால் உடனே ரஜினி பார்க்கும் மூன்று படங்கள் இதுதான்.

 hey ram
hey ram