ஆளே அடையாளம் தெரியாமல் போன ரஜினியின் முத்து பட நடிகை..! இப்போ எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..?

subasri-2

சினிமாவை பொருத்தவரை பல்வேறு பிரபலமான நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி விட்டு அதன் பிறகு காணாமல் போய்விடுகிறார்கள். அந்தவகையில் 90 காலகட்டத்தில் நடித்த பல்வேறு நடிகர்கள் தற்போது என்ன செய்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் ஜெண்டில்மேன் மற்றும் முத்து ஆகிய சூப்பர் ஹிட் திரைப்படங்களில்  நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமானவர் தான் சுபாஸ்ரீ இந்த நடிகையை தற்போது உள்ள ரசிகர்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு கிடையாது.

பொதுவாக தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்றால் அது இயக்குனர் சங்கர் தான் இவர் சினிமாவில் ஒரு திரைப்படம் இயக்கப் போகிறார் என்றால் தனக்கான பாதையையும் தன் கதைக்கான வித்தியாசத்தையும் மிக தனித்துவமாக காட்டுவதில் வல்லவர் அந்த வகையில் இவருடைய திரைப்படங்களும் பிரமிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும்.

அந்தவகையில் சங்கர் ஏதேனும் ஒரு திரைப்படத்தை இயக்கினால் போதும் அந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் போது கூட்டத்திற்கு பஞ்சமே இருக்காது. இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் முதன்முதலாக ஜெண்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் அர்ஜுன் மதுபாலா நம்பியார் மனோரமா கவுண்டமணி செந்தில் என பலர் நடித்திருந்த இத்திரைப்படத்தில் இரண்டாம் கட்ட கதாநாயகியாக சுபஸ்ரீ நடித்திருப்பார் இவர் ஜென்டில்மேன் திரைப்படத்திற்கு முன்பாகவே பிரசாந்த் நடிப்பில் வெளியான எங்க தம்பி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

subasri-1
subasri-1

மேலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த முத்து  திரைப்படத்திலும் அதன்பிறகு ஆறுச்சாமி மைனர் மாப்பிள்ளை போன்ற ஒருசில திரைப்படத்தில் நடித்து வந்த நமது நடிகை 1997 பிறகு எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை. இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் புகைப்படமானது வருடங்கள் கழித்து அவருடைய குடும்பத்துடன் இருக்கும்படி கிடைத்துள்ளது.இவ்வாறு வெளியான புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.