வெள்ளித்திரையில் ரிலீசாகும் திரைப்படங்கள் எப்படி பாக்ஸ் ஆபீஸில் சண்டை போட்டு வருகிறதோ அதே போல தான் சின்னத்திரையிலும் அந்த வகையில் ஒவ்வொரு சேனலும் டி ஆர் பி யில் முன்னிலை வரவேண்டும் என்ற காரணத்தினால் தங்களுடைய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்ட ஒரு பண்டிகைதான் தீபாவளி பண்டிகை இந்த பண்டிகையில் மக்கள் புத்தாடைகள் அணிந்து இனிப்பு வகைகள் உண்டு வெடி வெடித்து கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் தொலைக்காட்சிகளிலும் புது புது திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும்.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் என்ற திரைப்படம் ஆனது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது அந்த வகையில் இந்த திரைப்படம் புதிய திரைப்படம் என்பதம் காரணமாக ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்தை தொலைக்காட்சியில் விரும்பி பார்த்தார்கள்.
அதேபோல தீபாவளி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படமும் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் இந்த திரைப்படம் ஒரு பழமை வாய்ந்த திரைப்படம் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் தீபாவளி அன்று இந்த திரைப்படத்தை போட்டால் ரசிகர்கள் பார்ப்பார்களா என தொலைக்காட்சி நிறுவனம் பயந்தது.
ஆனால் இந்த படையப்பா திரைப்படம் ஆனது புதிதாக வெளிவந்த டாக்டர் திரைப் படத்திற்கு இணையாக டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திவிட்டது. அந்த வகையில் இத்திரைப்படத்திற்கு 17.75 டிஆர்பி ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளிவந்த தகவலை பார்த்த ரசிகர்கள் அண்ணாத்த திரைப்படம் 200 கோடி வசூல் செய்ததையும் படையப்பா திரைப்படம் டி ஆர் பி யில் முன்னிலை வகித்ததையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.