தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவருடைய நடிப்பில் உருவாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் தரமாக இருப்பது மட்டுமில்லாமல் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் இருப்பதன் காரணமாக மாபெரும் வெற்றியை கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் இவர் சிறுத்தை சிவா கூட்டணியில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா மற்றும் ரஜினிகாந்திற்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து உள்ளது.
என்னதான் விமர்சன ரீதியாகவும் பல சறுக்கல்களை சந்தித்தாலும் வசூல் 200 கோடிக்கு மேல் ஆகி மாபெரும் வெற்றி கண்ட இத்திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பிரமோஷன் தரமாக இருந்ததன் காரணமே இந்த திரைப்படத்தின் வெற்றி பெற காரணம் என கூறுகிறார்கள்.
பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மகனின் விஷயத்தில் எப்பொழுதும் தலையிடுவது கிடையாது அந்த வகையில் ரஜினியின் மகள் சௌந்தர்யா அஸ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் அந்த திருமணம் சில தருணத்தில் மூலமாக விவாகரத்தில் முடிவடைந்து விட்டது.
இதனை தொடர்ந்து விசாகன் என்பவரை சவுந்தர்யா திருமணம் செய்து கொண்டார் ஆனால் அவருக்கு தற்போதைய திரைப்படங்களில் நடிக்க ஆசை வந்துவிட்டது என்பதை அவரே வெளிப்படையாக கூறியதன் காரணமாக அவரிடம் பல்வேறு இயக்குனர்களும் கதையை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் அவர் திரைப்படத்தில் நடிப்பது சௌந்தர்யாவுக்கு பிடிக்காததன் காரணமாக விசாகன் இடம் நீங்கள் திரைப்படத்தில் நடிக்க கூடாது என திட்டவட்டமாக கூறியுள்ளாராம். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் திரைப்படத்தில் நடிக்கும் போது கதாநாயகிகளுடன் பழக்கம் ஏற்பட்டுவிடும் இதன் காரணமாக தான் சௌந்தர்யா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.