தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவ்வாறு பிரபலமான நடிகர் தமிழ் சினிமாவில் நம்பர்-1 நடிகராக வலம் வருவது மட்டுமில்லாமல் தற்பொழுது அவருக்கு வயது முதிர்ந்தும் கூட இன்றும் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து கலக்கி வருகிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு பல கோடி ரூபாய் மதிப்பு வசூல் பெற்ற திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார்.
இவ்வாறு அந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் யார் என்றால் அது ஷங்கர் தான். இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தமிழில் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதன்பிறகு பிரம்மாண்டம் என்ற பெயரில் ஏகப்பட்ட செலவுகள் செய்வது மட்டுமில்லாமல் சினிமாவில் பல்வேறு தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி திரைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து ஏவிஎம் புரோடக்சன் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சிவாஜி திரைப்படம். இவ்வாறு உருவான இந்த திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்ததன் காரணமாக காலதாமதத்தின் மூலமாக 2007 ஆம் ஆண்டுதான் வெளியானது இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கதாநாயகனாக நடித்து இருப்பார்.
மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரேயா விவேக் சுமன் மணிவண்ணன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்ததுமட்டுமில்லாமல் இந்த திரைப்படமாக தமிழ் சினிமாவில் சுமார் 84 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது அதேபோல சந்திரமுகி திரைப்படத்தின் சாதனையை முறியடித்தது.
ஆனால் இந்த திரைப்படத்திற்கு நடிகர் சூப்பர் ஸ்டார் அவர்கள் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே அட்வான்ஸ் பெற்றுள்ளார் பின்னர் இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வசூல் பெற்ற பிறகு ரஜினிகாந்துக்கு 18 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது.