நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய கடைசி படத்தின் இயக்குனரை தேர்ந்தெடுத்து இருக்கும் நிலையில் அதற்கான வேலைகள் தற்போது மிகவும் சீக்ரடாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சூப்பர் ஸ்டாராக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இருக்கும் ரஜினி தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் ரஜினியின் கடைசி படத்தை இயக்கப் போகிறார் என கூறப்படுகிறது. ஏனென்றால் சமீப காலங்களாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரும் அனைத்து படங்களும் மிகப்பெரிய வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்து வருகிறது. எனவே இதன் காரணமாக மீண்டும் சினிமாவில் ஒரு வெற்றினை பார்க்க வேண்டும் என ரஜினிகாந்த் தன்னுடைய கடைசி படத்தில் லோகேஷ் கனகராஜை ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதற்கு முன்பே ரஜினிகாந்தின் கடைசி படத்தை இயக்குனர் தான் இயக்கப் போகிறார் என பல இயக்குனர்களின் பெயர்கள் வெளிவந்த நிலையில் ஆனால் அது எல்லாம் வதந்தி என தெரியவந்தது இந்நிலையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் படத்தினை இயக்க இருக்கிறார் என்பது உண்மையான தகவலாகும்.
எனவே இதற்கான சீக்ரட்டான வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது தற்போது லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தினை இயக்கி வரும் நிலையில் அந்த படத்தில் பிசியாக இருந்து வருகிறார். அதேபோல் ரஜினி காந்த்தும் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு இவர்கள் இருவருமே படத்தில் கமிட்டாகி இருக்கும் நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகளையும் முடித்துவிட்டு இணைய இருக்கின்றனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜிடம் ரஜினிகாந்த் கால்ஷீட் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் இந்த படத்தை தயாரிக்க உள்ள நிறுவனத்திடமும் லோகேஷனுக்கு சம்பளமாக ரூபாய் 35 கோடி பேசி முடித்திருப்பதாகவும் அதற்கு அட்வான்சும் லோகேஷ் கனகராஜ் பெற்றுவிட்டாராம்.
இவர் இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது மேலும் விக்ரம் திரைப்படத்திற்கு முன்பே லோகேஷ் கனகராஜ் ரஜினிக்கு மாஸான கதை தயார் செய்து இருந்தாராம் ஆனால் ரஜினி மற்ற படங்களில் நடித்து வந்த காரணத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்பு கைவிடப்பட்டதாக என கூறப்படுகிறது.