Jailer movie: ரஜினியின் ஜெயிலர் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில் அது குறித்த விமர்சனம் பற்றி பார்க்கலாம். ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இதற்கான பணிகளில் பட குழு மிகவும் பிஸியாக இருந்து வருகிறத.
ஜெயிலர் படத்தினை சன் பிரக்சஸ் நிறுவனம் தயாரிக்க ரஜினியுடன் இணைந்து தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளார்கள். ஜெயிலர் படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
ஜெய்லர் படத்தின் டிரைலரை சமீபத்தில் பட குழு வெளியிட்ட நிலையில் சோசியல் மீடியாவின் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நெல்சன் ஜெயிலர் படத்தின் டிரைலரை ஷோகேஸ் என்ற பெயரில் வெளியிட்டு இருந்தார். 2 நிமிடம் 16 நொடிகள் உடன் வெளியான இந்த டிரைலரில் சிபிஐ அதிகாரியாக ஒருவர் சொன்னதும் டொனேஷன் ஏதாச்சும் வேணுமா என கேட்க அதற்கு சுனில் நோஸ்கட் கொடுக்கிறார்.
அதன் பிறகு ரஜினிக்கு ஒரு நோய் இருப்பதாகவும் அந்த நோய் வந்தவர்கள் பூனை போல் இருப்பார்கள், திடீரெனப் புலியாக மாறுவார்கள் என டிடிவி கணேஷ் கூறுகிறார். இவ்வாறு இதுதான் இந்த டிரைலரில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பீஸ்ட் படத்தினை நினைவுபடுத்தும் வகையில் இதனை அடுத்து விக்ரம் படத்தில் கமலுக்கு ஒரு போலீஸ் மகன் இருப்பார் அவர் இறந்த பிறகு தனது பேரனை பார்த்துக் கொள்வார்.
இதனை நினைவுபடுத்தும் விதமாக இந்த படத்தில் ரஜினி தனது போலீஸ் மகன் மற்றும் பேரனுக்கு ஷூ பாலிஷ் போட்டு தரும் காட்சியிடம் பெற்று இருக்கிறது. மேலும் பாட்ஷா படத்தில் எந்த அளவிற்கு ரஜினி பில்டப்பாக நடித்திருந்தாரோ அதேபோல் இந்த படத்திலும் ஓவர் பில்டப் இருக்கிறது. அப்படி, நம்ம கிட்ட பேச்சே கிடையாது வீச்சுதான் என்ற டயலாக் இடம் பெற்றிருக்கிறது.
அப்படி பாட்ஷா படத்தில் ரஜினி பாட்ஷாவாக எப்படி தன்னுடைய பையனுடன் கெத்தாக நடப்பாரோ அதேபோல் காட்சியும் இடம் பெற்றிருந்தது இவ்வாறு பல்வேறு படங்களில் நினைவுட்டலாக ஜெயிலர் படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது. ஆனால் இந்த டிரைலரில் தமன்னா ஒரு சீனில் கூட இடம்பெறவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.