விக்ரம் படத்தின் வசூலை முறியடித்த ரஜினியின் “ஜெயிலர்” எங்கு தெரியுமா.? தலைவர் எப்பவும் நிரந்தரம்

Jailer
Jailer

Jailer : தமிழ் சினிமாவில் இன்று டாப் நடிகராக வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் கடைசியாக இவர் நடித்த தர்பார், அண்ணாத்த படங்கள் சுமாராக ஓடின இதனால் ரஜினி மார்க்கெட் குறைந்தது என பலரும் விமர்சித்தனர் இதற்கு பதிலடி கொடுக்க பல்வேறு சிறந்த இயக்குனர்களுடன் ரஜினி கதை கேட்டார்.

அனைவரும் சொன்ன கதை பிரமாண்டமாகவும் அதே சமயம் வித்தியாசமாக இருந்தாலும் ரஜினிக்கு அது ஒத்துவரவில்லை நெல்சன் சொன்ன ஜெயிலர் கதை ரொம்ப பிடித்துப் போகவே உடனே ஓகே சொன்னார். சிறு இடைவெளிக்கு பிறகு அதிரடியாக இந்த படம் உருவானது படத்தில் ரஜினி உடன் இணைந்து சிவராஜ்குமார்..

மோகன்லால், விநாயகன், வசந்த் ரவி, தமன்னா, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மாரிமுத்து , ரெடின் கிங்ஸ்லி, சுனில் போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர். ஜெயிலர் படம் கோலாகலமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது படம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருந்ததால் குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று பட்டி தொட்டி எங்கும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடி கொண்டு இருக்கிறது.

இதனால் ஜெயிலர் படத்தின் வசூலும் அதிகரித்தது முதல் நாளே 90 கோடிக்கு மேல் வசூல் இந்திய நிலையில் அடுத்தடுத்த நாள்களிலும் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை இதுவரை படம் வெளியாகி 18 நாட்களில் மட்டும் 565 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் தற்பொழுது வரை 179 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

இதன் மூலம் தமிழகத்தில் கமலின் விக்ரம் பட சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற நாட்களிலும் வசூல் குறைய போவதில்லை நிச்சயம் 600 கோடியை தொட்டு ஒரு பிரம்மாண்ட சாதனையை ஜெயிலர் படைப்பது உறுதியான பலரும் அடித்து கூறி வருகின்றனர்.