பாகுபலி படத்தை விட ரஜினியின் இந்த திரைப்படம் வேற லெவல் இருந்திருக்கும் ஆனால் முடியாமல் போனது வருத்தப்படும் பிரபல இயக்குனர்..

தற்போதைய காலகட்டத்தில் ஒரு படம் அதிக வசூலை அள்ளி விட்டால் அந்த திரைப்படம் சிறப்பான படமாக உயர்த்தப்படும் அந்த வகையில் பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வந்த திரைப்படம் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டிருந்தாலும் சுமார் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை ஈட்டியது.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ஒருவர் இன்று இந்திய சினிமாவுக்கு எடுத்துக்காட்டான படங்களை விட ரஜினியின் ஒரு படம் பேசப்பட்டிருக்கும் ஆனால் எதிர்பாராத விதமாக அந்த படமும் கைவிடப்பட்டது இப்படத்தின் இயக்குனர் மீது சமீபத்தில் கூறினார்.

ஆனால் அந்த படம் நேரடியாக எடுக்கப் படவில்லை என்றாலும் கோச்சடையான் என்ற பெயரில் அனிமேஷன் ஆக எடுக்கப்பட்டது. ஆனால் படத்தின் கதை சிறப்பாக இருந்தாலும் படம் பொம்மை படம் பார்ப்பது போலவே இருந்ததால் அந்த திரைப்படம் ஆள் அட்ரெஸ் தெரியாமல் காணாமல் போனது.

படத்தை நேரடியாக எடுத்திருந்தால் பாகுபலியை விட இந்த படம் வசூலிலும் நிகழ்ச்சியிலும் அதிகம் பேசப்பட்டிருக்கும் படமாக இருக்கும் என கே எஸ் ரவிக்குமார் கூறினார்.

இருப்பினும் ரஜினியை இப்போதும் அடிக்கடி கேஎஸ் ரவிக்குமாரை பார்த்து ராணா படத்தின் கதையை கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார் எனவும் தெரிவித்தார் கேஎஸ் ரவிக்குமார்.