தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் மிஷ்கின் இவர் இயக்கிய ஒவ்வொரு திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அளித்ததோடு மட்டுமல்லாமல் எந்த ஒரு படத்தின் சாயலும் இல்லாமல் இருப்பதால் இவரது படத்தை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது தற்போது கூட பிசாசு இரண்டாம் பாகத்தை வைத்து எடுத்து முடித்துள்ளார்.
இந்த படம் வெகுவிரைவிலேயே வெளியாக இருக்கிறது இதை தொடர்ந்து அடுத்தடுத்த புதிய படங்களிலும் கமிட்டாகி இருக்கிறார் மிஷ்கின் இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க விழாவில் இயக்குனர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது ரஜினி குறித்தும் பேசி உள்ளார் அதில் அவர் கூறியது ரஜினிகாந்தை விட மிகச் சிறந்த நடிகர் இந்த உலகத்தில் இருக்கிறாரா. நான் தப்பு தாளங்கள் திரைப்படத்தை 20 முறை பார்த்திருக்கிறேன் நான் சினிமாவில் அப்படித்தான் கற்றுக்கொண்டேன் குணாவும், மகாநதியும் அதிகம் என்னை ஆக்கிரமித்து இல்லை என்றால் ரஜினிகாந்த் பக்கம் தான் நான் இருந்து இருப்பேன்.]
அவர் ஒரு சிறந்த நடிகர் நான்கு நாட்களுக்கு முன் ரஜினிகாந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அப்போது தமிழகமே மிரண்டுபோய் சோகத்தில் இருந்தது எனக்கு அவருடைய பெரும்பாலான படங்கள் பிடிக்கும் ஒரு சில படங்கள் பிடிக்காது ஆனால் அவர் மீது நிறைய காதல் வைத்துள்ளேன். முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு மக்களின் ரசனைக்காக சிரிப்புக்காக 47 வருடங்களை கொடுத்திருக்கிறார் இயற்கை அவரை எப்போதும் காப்பதுக்கொண்டே இருக்க வேண்டும்.
அவர் இன்னும் 50 வருடங்களில் இருக்க வேண்டும் அந்த மகா கலைஞனை எவ்வளவு நன்றியுடன் நாம் பார்க்க வேண்டும் அண்ணாத்த மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையவேண்டும் மேலும் நாம் குழந்தைகளுடன் அந்தப் படத்தைப் போய் பார்க்க வேண்டும் இந்தப்படம் 500 கோடி வசூலை குவிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.