தொடர் தோல்வியினால் பிரபல இயக்குனரை தனது 171வது படத்திற்காக தட்டி தூக்கிய ரஜினி.! போட்டி போட்டுக் கொள்ளும் பிரபலங்கள்..

rajini
rajini

தென்னிந்திய சினிமாவில் 40 ஆண்டு காலங்களாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினி தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வந்த நிலையில் சமீப காலங்களாக இவருடைய நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு வெற்றினை பெறவில்லை. அந்த வகையில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றாலும் கலவை விமர்சனத்தை பெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இவர் இன்னும் சில திரைப்படங்களில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருக்கிறார் அதாவது வயதான காரணத்தினால் இவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை எனவே சில திரைப்படங்களில் நடித்துவிட்டு பிறகு நடிப்பதை நிறுத்தி விடலாம் என முடிவு செய்திருக்கும் நிலையில் தொடர்ந்து இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு இவருடைய படத்தினை உருவாக்குவதற்காக வரிசை கட்டி நிற்கிறார்கள்.

இந்நிலையில் தற்பொழுது ரஜினி நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார் மேலும் இவர்களை தொடர்ந்து மோகன் லால், ஷிவ்ராஜ் குமார் போன்ற தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இணைந்து நடித்திருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவுள்ளது.

மேலும் இதனை அடுத்து ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். மேலும் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியான நிலையில் இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இந்த திரைப்படங்களை தொடர்ந்து ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறாராம்.

இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக இருப்பதாகவும் ரஜினியின் 171வது படத்திற்காக லோகேஷ் கனகராஜ் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பே இவர்களுடைய கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாக கூறிய நிலையில் சில காரணங்களினால் உருவாகாமல் போனது. இப்படிப்பட்ட நிலையில் ரஜினியின் 171வது படத்தினை சன் பிரிக்ஸ் அல்லது லலித் குமார் தயாரிப்பு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.