ரஜினியின் 169 படம் இப்படித்தான் இருக்கும்.? வெளியே கசிந்த தகவல்.

rajini-
rajini-

தமிழ் சினிமா உலகில் பல வருடங்களாக நடித்து வெற்றி மேல் வெற்றியை குவித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து மாஸ் படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் இன்னும் நம்பர்-1 அந்தஸ்தை இழக்காமல் தன்வசப்படுத்தி உள்ளார்.

ரஜினி கடைசியாக சிறுத்தை சிவாவுடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் எப்படியோ அதேபோல ரஜினிக்கும் இந்த படம் ரொம்ப பிடித்துப் போய்விட்டதாம்.

அண்ணாத்த திரைப்படம் சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்து அசத்தியது இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த ரஜினி ஒருவழியாக இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் இணைந்து முதல் முறையாக நடிக்க உள்ளார். இது ரஜினிக்கு 169 வது திரைப்படமாகும்.

ரஜினி மற்றும் நெல்சன் இணையும் இந்தப் படத்தை மிகப் பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தசை தன்வசப்படுத்திக் இருக்கும் அனிருத் இசையமைக்கவுள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவிலேயே தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினியின் 169  வது திரைப்படத்தில் பாலிவுட் டாப் நடிகை ஐஸ்வர்யாராய் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அதேசமயம் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளிவந்த சீனி கம் என்ற திரைப்படத்தின் கதை அம்சத்தை மையமாக வைத்துதான் இந்த படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் இச்செய்தி இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.