பெரிய நடிகன் என்கின்ற தலைகனம் ரஜினியிடம் ஒருபோதும் இருக்காது – ரகசியத்தை பகிர்ந்த பி வாசு.!

RAJINI
RAJINI

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவருக்கு பி. வாசு.. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து மன்னன், பணக்காரன், சந்திரமுகி என மாபெரும் ஹிட் படங்களை கொடுத்தவர் அதிலும் குறிப்பாக பி. வாசு ரஜினியை வைத்து இயக்கிய திரைப்படம் சந்திரமுகி.  இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

மேலும் இந்த திரைப்படம் 1000 நாட்கள் ஓடி திரையரங்குகளில் புதிய சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து இயக்குனர் பி. வாசு இப்பொழுது சந்திரமுகி இரண்டாவது பாகத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார் இந்த படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பி வாசு சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினி குறித்து பேசுகிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. பி. வாசு ஒரு தடவை ரஜினியை சந்தித்து பணக்காரன் படத்தின் கதையை கூற அவரது வீட்டிற்கு சென்று இருக்கிறார் அப்பொழுது ரஜினி ஒரு அறையில் இருந்தார். அங்கு பொய் பார்த்த பி. வாசு அதிர்ச்சி அடைந்தாராம்.

அந்த அறையில் நான்காம் பக்கமும் ஆள் உயர முகம் பார்க்கும் கண்ணாடி இருந்திருக்கிறது அதில் உள்ளே ரஜினியின் 500க்கும் மேற்பட்ட பிம்பங்கள் தெரிந்ததாம்.. இயக்குனர் பி. வாசு பயந்து போய் விட்டாராம் பிறகு ரஜினியிடம் எதற்காக இந்த கண்ணாடியை வைத்திருக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பதில் சொன்னது அது ஒன்றும் இல்லை நான் இப்பொழுது பெரிய நடிகன் இந்த கண்ணாடியில் என் முகத்தை பார்த்துக் கொண்டிருப்பேன் உன்னை எல்லாம் பெரிய ஸ்டார் ஆக்கி இருக்கிறார்கள் எல்லாம் தலையெழுத்து என எனக்கு நானே சொல்லிக் கொள்வேன் இப்படி நானே என் முகத்தை பார்த்து விமர்சனம் செய்வதால் தன் புகழ் என்றுமே என் தலைக்கு ஏறாது எனக் கூறினாராம்..