மேடையில் மாணிக் பாட்ஷாவாக மாறிய ரஜினிகாந்த்..! இணையத்தில் வைரலாகும் லைவ் பர்பாமன்ஸ் வீடியோ..!

batsha-1
batsha-1

தமிழ் சினிமாவில்  1995ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் பாட்ஷா இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது  மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது மட்டுமின்றி வசூலிலும்  மாபெரும் சாதனை படைத்தது.

இவ்வாறு வெளியான இந்த திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் இயக்கியதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமின்றி நக்மா, ரகுவரன், ஜனகராஜ் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள்.

அந்தவகையில் இத்திரைப்படமானது அந்த காலத்திலே சுமார் 200 நாட்களுக்கும் மேலாக தியேட்டரில் ஒளிபரப்பப்பட்டு  ரசிகர்களை  அலைமோத வைத்தது.  மேலும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய தனித்துவமான ஸ்டைல் மற்றும் டயலாக் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சூப்பர் ஸ்டார்  அன்றைய கால கட்டத்தில் தன்னுடைய ஸ்டைலையும்  அழகையும் எவ்வாறு திரைஉலகில் காட்டி நடித்து வந்தாரோ அதே போல தான் தற்போது வரை தன்னுடைய திரைப்படத்தில் காட்டி வருகிறார்.

பொதுவாக ரஜினி பொது மேடையில் பேசும்போது ரசிகர்களுக்கு  புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் பேசுவதில் வல்லவர் அந்த வகையில் தனது சொந்த வாழ்க்கையின் கதையை அடிக்கடி இவர்களுக்கிடையே பேசுவது மட்டுமில்லாமல் பல தத்துவ மழை களையும் பொழிவார்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு மேடையில் பேசும்பொழுது பாட்ஷா திரைப்படத்தில் வரும் காட்சியை  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லைவ் பர்பாமன்ஸ் இல் மிக சிறப்பாக செய்து காட்டியிருப்பார். இவ்வாறு  வெளிவந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் இன்று வைரலாக பரவி வருகிறது.