73 வது பிறந்த நாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.? அதிர்ந்த ரசிகர்கள்

Rajini
Rajini

Rajini : ரஜினிகாந்த் சினிமாவின் மீது உள்ள ஆர்வம் காரணமாக சென்னைக்கு வந்தார் முதலில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் உருவான அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்து திரைக்கு அறிமுகமானார்.  அதன் பிறகு சின்ன சின்ன வேடங்களில் நடித்த வந்த ரஜினி பைரவி படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.

அன்றிலிருந்து இப்பொழுது வரையிலும் ஒவ்வொரு கதையையும் நன்கு தேர்வு செய்து அதில் தனது நடிப்பு திறமை, ஸ்டைல் போன்றவற்றை காட்டி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வெற்றி கண்டு வருகிறார் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் கூட பெரிய ஹிட்டடித்ததை தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

குடும்ப பிரச்சனைக்கு மத்தியில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன தனுஷ்.. வைரலாகும் பதிவு.!

தலைவர் 170, 171 மற்றும் லால் சலாம் ஆகிய படங்கள் கைவசம் இருக்கிறது இதில் லால் சலாம் திரைப்படம் வெளிவர இருக்கிறது. இப்படிப்பட்ட ரஜினி இன்று தனது 73 வது பிறந்த நாளை தனது குடும்பத்துடன் கோலாகலமாக கேக் வெட்டி கொண்டாடினார் திரை பிரபலங்கள் நண்பர்கள் மற்றும் அவருடைய தீவிர ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் தனுஷ் கூட தன்னுடைய குடும்ப பிரச்சினைகள் எல்லாம் மறந்து ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. பிஎம்டபிள்யூ போன்ற பல விலை உயர்ந்த சொகுசு கார்கள் இருக்கின்றன.

மூட்டை தூக்கம் தொழிலாளி சூப்பர் ஸ்டாராக வளர்ந்தது எப்படி? ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷல்..

மேலும் ஒரு படத்திற்கு சுமார் 70 கோடியிலிருந்து 100 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது   ரஜினியின் மொத்த சொத்து மதிப்பு  சுமார் 480 கோடியிலிருந்து 500 கோடி வரை இருக்கும் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிய அளவு பேசப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.