தனுஷின் இரண்டு திரைப்படத்தில் நடிக்க மறுத்த ரஜினி.! பல வருடங்களுக்கு மேடையிலேயே உண்மையை கூறிய சூப்பர் ஸ்டார்..

rajinikanth
rajinikanth

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் வயதானாலும் மவுசு குறையாமல் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்காக கமிட்டாகி வருகிறார். அப்படி தற்பொழுது இவர் தனது மகள் ஐஸ்வர்யாவின் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதற்கு முன்பு தனது மற்றொரு மகள் சௌந்தர்யா இயக்கத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் திருமணமாகி 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றனர்.

விசாரணைன்னு கூப்பிட்டு கொலை பண்றதுக்கு நான் ஒன்னும் உங்கள மாதிரி இல்ல… மிரட்டலாக வெளியானது சைரன் ட்ரைலர்

பிரிந்ததற்குப் பிறகு இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் ஐஸ்வர்யா லால் சலாம் திரைப்படத்தினை இயக்கியுள்ளார். இந்த படம் வருகின்ற 9ம் தேதி வெளியாக இருக்கிறது. லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் நிலையில் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, நான் எப்போதும் பெரிய இயக்குனர்களுடன் பணியாற்றி பழகிவிட்டதால் மகள் இயக்கத்திலேயே நடிக்க முதலில் தயங்கினேன் எனக் கூறியிருந்தார்.

கோச்சடையான் படத்தில் நடிக்கும் பொழுதே சௌந்தர்யாவுக்கு பதில் கே.எஸ் ரவிக்குமார் வந்து தான் ஆக்சன், கட் சொல்ல வேண்டும் என கூறினேன் தனுஷ் எனக்காக இரண்டு கதைகள் வைத்திருந்தார். ஆனால் நான் சொன்ன காரணத்தை அவர் புரிந்து கொண்டார் என ரஜினி தெரிவித்தார் மேலும் லால் சலாம் படத்தில் நானே கேட்டு நடித்ததாக கூறியிருந்தார்.

கோடி அருவி கொட்டுதே அடி என் மேல… அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால.. கட்டி பிடித்து ரோமன்ஸ் பண்ணும் புது பொண்ணு மாப்பிளை முத்து மீனா.!

லால் சலாம் படத்தினை தொடர்ந்து ரஜினி ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தனது 171வது படத்தில் நடிக்கவுள்ளார்.