அருள்மொழி வர்மனுக்கு போன் போட்டு பேசிய ரஜினிகாந்த்..! வெளிய வந்த சுவாரசிய தகவல்..

rajini
rajini

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்தினம்  எடுத்திருக்கிறார். படம் பெரிதாக இருந்த காரணத்தினால் அது இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டார் அதன்படி முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.

பலரும் இந்த கதையைப் படித்திருக்கிறார்கள் ஆனால் படமாக எப்படி இருக்கும் இதுவரை பார்த்தது கிடையாது அதனால் இந்த படத்தை பார்க்க பலரும் போட்டி போட்டுக் கொண்டு வந்தனர். குறிப்பாக 80, 90 கால கட்டங்களில் இருந்தவர்கள் தான் இப்பொழுது இந்த படத்தை பார்க்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.

அதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இந்த திரைப்படம் இதுவரை 240 கோடிக்கு மேல் அள்ளி அசதி உள்ளது வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகத்தையும் மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில்  எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இதனால் மணிரத்தினமும் சரி படத்தில் நடித்த நடிகர், நடிகைகளும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயம் ரவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதனை ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சொல்லியுள்ளது.

என்னவென்றால் நடிகர் ரஜினிகாந்தின் தொலைபேசி அழைப்பு தன்னுடைய நாளையும், வருடத்தையும் சிறப்பாகி உள்ளதாக தெரிவித்திருக்கிறார். அத்துடன் தன்னுடைய திரை பயணத்திற்கு புது அர்த்தம் கிடைத்துள்ளதாகவும் நிகழ்ந்துள்ளார் அதுமட்டும் இல்லாமல் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் படத்தை போற்றியும் படத்தில் தன்னுடைய நடிப்பு பற்றியும் பாராட்டியது ஆசீர்வதிக்கப்பட்டது போல் உணர்வதாக கூறுகிறார்.