Rajini : தமிழ் சினிமாவில் இன்று நம்பர் ஹீரோவாக வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இளம் இயக்குனர் நெல்சன் உடன் கைகோர்த்து ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் இணைந்து ஜாக்கி ஷராஃப், சிவ ராஜ்குமார், விநாயகன், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி..
மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படம் மிகப்பெரிய ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகியுள்ளது ஜெயிலர் படத்தை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர் படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக படக்குழு அடுத்த அப்டேட் களை கொடுத்து வருகிறது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து காவாலா, ஹுக்கும் மற்றும் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் நேற்று ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் படத்தின் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர் அப்பொழுது பேசிய ரஜினி.. ஜெயிலர் படம் உருவான விதம், இயக்குனர் நெல்சனுக்கு ஏற்பட்ட பிரச்சனை மற்றும் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசினார். கடைசியாக குடி பழக்கத்தை பற்றியும் ரஜினி பேசினார் அவர் சொன்னது என்னவென்றால்..
குடிப்பழக்கத்தை கைவிடுங்கள் குடிப்பழக்கத்தால் எவ்வளவோ இழந்தேன் என அனைவருக்கும் அறிவுரை கூறினார். இந்த மேடையில் மட்டுமல்ல பல இடங்களில் தொடர்ந்து ரஜினி குடிப்பழக்கத்தையும், சிகரெட் பழக்கத்தையும் அனைவரும் கைவிட வேண்டும் என சொல்லிக்கொண்டு தான் வருகிறார்.