நெருங்கிய நண்பனுக்கே பட வாய்ப்பு தர மறுத்த சூப்பர் ஸ்டார்.! இயக்குனர் எவ்வளவு சொல்லியும் கேட்காத ரஜினிகாந்த்.!

rajini
rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருகிறார். இவரைத் தொடர்ந்து பல இளம் நடிகர்கள் ரசிகர்களை கவரும்படியான ஹிட் படத்தை கொடுத்து வந்தாலும் இன்றும் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அதற்கு முக்கிய காரணம் சினிமாவில் அவரது தன்னம்பிக்கை, விட முயற்சி போன்றவை ஆகும். இப்போதும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது தனது 169வது திரைப்படம் ஆன ஜெயிலர் படத்தில் இளம் இயக்குனர் நெல்சன் உடன் கைகோர்த்து இணைய உள்ளார்.

இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என தெரிய வருகிறது. அதற்குள் படத்தில் நடிக்க மற்ற நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகிறது பட குழு. இந்த நிலையில் ரஜினியின் நடிப்பின் வெளிவந்த எவ்வளவோ திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரட் படங்களாக அமைந்துள்ளன.

rajini - basha
rajini – basha

அப்படி ரஜினி நடிப்பில் வெளிவந்த பாட்ஷா திரைப்படம் ரஜினிக்கும் ரொம்ப பிடித்த படம் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் பேவரட் படமாக அமைந்தது. பாட்ஷா படத்தில் முதல் பாதி கதைக்கு ரஜினியுடன் சரண்ராஜ் நண்பனாக நடித்திருப்பார். இவர்களின் ஜோடி பாட்ஷா படத்தில் பார்க்க சிறப்பாக இருந்தது.

ஆனால் முதலில் இந்த படத்தில் சரண்ராஜ் நடித்த கதாபாத்திரத்திற்கு மம்முட்டியை தான் தேர்வு செய்தனர். ரஜினியோ தளபதி படத்தில் மம்மூட்டியுடன் நெருங்கிய நண்பராக நடித்ததால் இந்த படத்திற்கும் மம்முட்டி நடித்தால் நன்றாக இருக்காது என இயக்குனரிடம் பேசி சரண்ராஜை நடிக்க வைத்தாராம். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

rajini - thalapathy
rajini – thalapathy