நேரம் காலம் பார்க்காமல் கமலை பாராட்டிய ரஜினிகாந்த்..! இணையத்தில் வெளியான உண்மை சம்பவம்..!

kamal-rajini-2

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து முன்னனி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் தூண்கள் என்று சொல்லலாம் அந்த வகையில் இவர்களுக்கு தற்போது வயது முதிர்ந்தாலும் சரி இவர்களை மிஞ்ச எந்த ஒரு நடிகர் இன்னும் பிறக்கவில்லை என்று சொல்லலாம்.

அந்த வகையில் இவருடைய திரைப்படங்கள் வெற்றி திரைப்படமாக அமைவது மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்று வருகிறது. என் நிலையில் சமீபத்தில் வெளிவந்த கமலின் விக்ரம் திரைப்படம் ஆனது தமிழகத்தில் அதிக அளவு வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக கருதப்பட்டது.

அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 திரைப்படத்திற்கு பிறகு  ஒரு வெற்றி திரைப்படம் என்றால் அது கமலின் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தான். இவர்கள் இருவரும் சிறந்த நடிகர் மட்டும் இல்லாமல் நண்பர்களும் கூட அந்த வகையில் சினிமாவில் தங்களுக்கான தனித்தனி பாதையை அமைத்துக் கொண்டார்கள்.

மேலும் கமல் திரைப்படத்தை ரஜினியும் ரஜினி திரைப்படத்தை கமலும் பாராட்டி வருவது வழக்கம் தான் அப்படி பல வருடங்களுக்கு முன்பாக நடந்த ஒரு விஷயம் ரசிகர்களின் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது கமல் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் என்ற திரைப்படமானது 1981 ஆம் ஆண்டு வெளியாகின அப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஷூட்டிங்கில் பணியாற்றி வந்தார்.

இவ்வாறு படபிடிப்பு தளத்தில் கமலின் திரைப்படம் ஞாபகம் ஆகவே இருந்ததன் காரணமாக பட படிப்பு முடிந்த கையோடு இரவு 11 மணி காட்சியை பார்த்து ரசித்து வந்துள்ளார் அந்த வகையில் அந்த திரைப்படம் ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டதன் காரணமாக உடனடியாக நடிகர் கமலை சந்தித்து பாராட்ட  சென்று விட்டார்.

kamal rajini-1
kamal rajini-1

இவ்வாறு கமலை பாராட்டுவதற்காக ரஜினி சுமார் 2.30 மணி  அளவில் கமலின் வீட்டு கதவை தட்டி அவரை எழுப்பி பாராட்டி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.