உதவி இயக்குனர்களுக்கு 5000 சம்பளமா.. சூப்பர் ஸ்டார் ரஜினி எடுத்த அதிரடி முடிவு ஆடி போன உதவி இயக்குனர்கள்..

actor rajinikanth
actor rajinikanth

Actor Rajinikanth: 70 வயதை கடந்தும் முன்னணி நடிகராக கலக்கி வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது வரையிலும் பல வெற்றி படங்களை தந்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது வருகிறது.

அந்த வகையில் கடைசியாக இவருடைய நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியினை தொடர்ந்தது. இதனை அடுத்து ஞானவேல் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் நிறைவடைய இருக்கிறது.

தலைவர் 171ல் ரஜினிக்கு வில்லனாக முன்னணி நடிகரை தட்டி தூக்கிய படக் குழு..

வேட்டையன் படத்தினை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதற்கான பணிகளை லோகேஷ் கனகராஜ் ஆரம்பித்திருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் துவங்க இருக்கிறது.

இவ்வாறு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வரும் ரஜினிகாந்த் தற்போது பிரபல நடிகராக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்ட தான் பிரபலமானார். கூலி வேலை செய்து வந்த ரஜினிகாந்த் கடைநிலை ஊழியர்களுக்கு சினிமாவில் சம்பளம் எவ்வளவு என்பது நன்றாகவே தெரியும்.

ஏனென்றால் இவரும் அப்படி குறைவான சம்பளத்தை வாங்கி வந்தவர் தான். சினிமாவில் பிரபலமான பிறகு சில திரைப்படங்களை ரஜினிகாந்த் இயக்கினார் அப்படி வள்ளி என்ற திரைப்படத்தை தயாரித்த பொழுது அதில் சிலர் உதவி இயக்குனராக பணிபுரிந்தனர். அவர்களுக்கு 5000 ரூபாய் தான் மாத சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது.

போண்டாமணி மறைந்தாலும் காலத்தால் அழியாமல் இருக்கும் அவர் நடித்த 5 திரைப்படங்கள்.!

இது ரஜினிகாந்துக்கு தெரியாம இருந்து வந்த நிலையில் ஒரு முறை கேள்விப்பட பிறகு இயக்குனரை அழைத்து மற்ற படங்களை போல அவர்களுக்கு குறைவான சம்பளம் கொடுக்க வேண்டாம். இது நமது படம் எனவே அதிக சம்பளம் கொடுங்கள் எனக் கூறியுள்ளார் எனவே ஒவ்வொரு உதவி இயக்குனருக்கும் 15 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பளத்தை பார்த்தவுடன் உதவி இயக்குனர்கள் ஆச்சரியப்பட்டதாக கூறப்படுகிறது.