Rajinikanth: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்த நிலையில் இதற்கான நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே நிவாரண பணிகளுக்கு உதவி செய்யும் வகையில் திரை கலைஞர்கள் பலரும் தங்களால் முடிந்த நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.
நிலச்சரிவில் பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து உள்ளனர். இந்த சூழலில் தற்பொழுது இன்னும் தேடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே கேரள மாநில அரசு நிவாரண நிதி கேட்டு அறிவிப்பு வெளியிட்டவுடன் இந்திய சினிமாவில் அடுத்தடுத்து தொடர்ந்து பெரிய நடிகர்கள் நிதி உதவி செய்து வருகின்றனர்.
அதன்படி முதலாக நடிகர் விக்ரம் 20 லட்சம் ரூபாய் வழங்கினார் இவரை தொடர்ந்து நடிகை ரஷ்மிகா மந்தனா 10 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளார். அதேபோல் சூர்யா, ஜோதிகா மாற்றம் கார்த்தி என ஒரே குடும்பத்தில் இருக்கும் இவர்கள் மூவரின் சார்பாக 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர்.
வயநாடு நிலச்சரிவு குறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் தல பக்கத்தில், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் இதயம் நொறுங்குகிறது. மீட்பு நடவடிக்கையில் குடும்பங்களுக்கு உதவி செய்யும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் மற்றும் களத்தில் உள்ள மக்களுக்கும் என்னுடைய வணக்கங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரைத் தொடர்ந்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது சார்பில் இருந்து சுமார் 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மலையாள நடிகர்களுக்கு இணையாக தமிழ் பிரபலங்களும் நிதியுதவி வழங்கி வரும் நிலையில் ஆனால் ரஜினிகாந்த், அஜித், விஜய் போன்ற முக்கிய நடிகர்கள் இதுவரையிலும் நிதி உதவி வழங்காதது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிவுள்ளது.