Jailer Movie: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் கடந்து இருக்கும் நிலையில் இந்த படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த ஜெயிலர் படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இவ்வாறு ஜெயிலர் படம் வெளியான முதல் நாளே 150 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பல தகவல்களை பகிர்ந்து வரும் நிலையில் ‘மசால் வடை மசால் வடை தான்யா’ எனவும் கூறி கலாய்த்து வருகிறார்கள்.
அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினியின் வெற்றி படமாக ஜெயிலர் வெளியாகி இருக்கிறது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு ரஜினி நடிப்பில் வெளியாகும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இவ்வாறு ரஜினி நெல்சன் இருவரும் தங்களது கம்பேக்கை கொடுத்துள்ளனர். ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.
ஜெயிலர் படம் முதல் நாளில் 70 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இரண்டாவது நாளில் 100 கோடி வரை நெருங்கி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் முதல் நாள் வசூல் 150 கோடி என ரஜினி ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.
மேலும் இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் ஆனால் இதுவரையிலும் ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்து சன் பிரிக்ஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை. எனவே ஜெயிலர் வசூல் நிலவரம் குறித்து ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்து வருகிறார்.
ஒரே நாளில் 150 கோடி வசூல் செய்வது எல்லாம் பொய் என்பது போல வடிவேலுவின் மீம்ஸ் செய்யும் ஷேர் செய்துள்ளார். ‘மசால் வடை மசால் வடை தான்யா’ என்ற கேப்ஷனுடன் போட்டிருக்கும் நிலையில் ரஜினி ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.