தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் மனசு பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். ஏனெனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குழந்தை மனசு கொண்டவர் ஆவார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகரை வைத்து இயக்குனர் சங்கர் அவர்கள் இதுவரை மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார் அந்த வகையில் இந்த மூன்று படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் மிகப் பெருமளவு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் நமது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்கள் அண்மையில் நேர்காணல் ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பேசியுள்ளார். அந்த வகையில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து நான் திரைப்படம் இயக்குவதற்கு முன்பாகவே ஒரு விழாவில் பார்த்துவிட்டேன்.
அப்பொழுது நான் அவரிடம் நேரடியாக போய் பேசலாமா வேண்டாமா என ஓரமாக ஒதுங்கி நின்றேன் ஆனால் அவர் என்னைப் பார்த்துவிட்டு உடனே என் அருகில் வந்து ஹாய் சங்கர் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டார் அதுமட்டுமில்லாமல் என்ன இந்த பக்கம் என்று மற்றொரு கேள்வியும் என்னிடம் கேட்டது அசிங்கமாக ஆகிவிட்டது.
அதுமட்டுமில்லாமல் ஒருவரைப் பார்த்தால் யார் முதலில் பேசுவது நீயா நானா என யோசித்து நின்று கொண்டிருக்காமல் போய் ஒரு ஹாய் சொல்லி ஆரம்பிச்சுட்டோம் என்றால் எல்லாம் முடிஞ்சுவிடும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சந்திப்புக்கு பிறகு கடைபிடிக்க ஆரம்பித்தேன் என சங்கர் கூறியுள்ளார்.