கமல் போல் வளர முடியாமல் பிரபல நடிகையிடம் புலம்பி தள்ளிய ரஜினிகாந்த்.. ஆசை யாரத்தான் விட்டது

Rajini
Rajini

Rajini : தமிழ் சினிமாவில் இரு தூண்கள் ரஜினி, கமல்.  இருவரும் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் போட்டி போட்டுக் கொள்கின்றனர் ஆனால் அது ஆரோக்கியமான போட்டியாக தான் இன்றுவரை பார்க்கப்படுகிறது. அதனாலவே போய் என்னவோ இவர்கள் இன்னும் நட்புடன் பழகி வருகின்றனர்.

ரஜினி பைரவி படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமானார். பிறகு நல்ல நல்ல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறி அதிகம் சம்பளம் வாங்கினார். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் ரஜினி கமலை விட குறைந்த சம்பளம் வாங்கி தான் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் ரஜினி திரைக்கு அறிமுகமானார்.

மெகா ஹிட் அடித்த ஜீன்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகர் தான்.! பல வருடம் கழித்து வெளியான தகவல்..

அந்தப் படத்தை பாலச்சந்தர் இயக்க கமலஹாசன் ஹீரோவாக நடித்தார் ஸ்ரீதேவி மற்றும் ரஜினி அந்த படத்தில் புதுமுகங்களாக களம் இறங்கினார் அதனால் கமலுக்கு 30,000 சம்பளமும், புதுமுகமான ஸ்ரீதேவிக்கு 5000 ரஜினிக்கு 3000 பேசப்பட்டு 2000-மும் கொடுத்திருக்கின்றனர்.

பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும் ரஜினிக்கு அதிகபட்சமாக 3000, 4000 தான் சம்பளம் வாங்கி வந்தார் ஆனால் அப்பொழுது கமல் 30,000 – 40,000 என வாங்கி வந்தாராம் இதை பார்த்த ரஜினிக்கு ஒண்ணுமே சொல்ல முடியவில்லை, ஒரு தடவை நடிகை ஸ்ரீதேவியிடம் கமல் போல் நானும் வளர வேண்டும்  அவர் போல் சம்பளம் வாங்க வேண்டும் ஏக்கத்தில் பேசினாராம்.

வீட்டுக்கு வந்த இரண்டாவது நாளே விஜயாவை மதிக்காத ஸ்ருதி.. பணக்கார மருமகளை விட்டுக் கொடுக்காத மாமியார் – வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ.

இதனை ஸ்ரீதேவி ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது கூறினார் அவர் சொன்னது போலவே பின் நாட்களில் கமலை ஓரம் கட்டி ரஜினி அதிகம் சம்பளம் வாங்கி அசத்தினார். இப்பொழுது கூட கமலை விட அதிக சம்பளம் வாங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.