jailer movie; நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்பொழுது ஜெயிலர் படத்தின் சென்சார் குறித்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறது.
அதாவது, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் ரஜினிகாந்த் கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இதனை அடுத்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ஜெயிலர் படத்தில் மிகவும் பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இந்த படத்தில் இடம் பெற்றிருந்த மூன்று பாடல்கள் வெளியாகிய சோசியல் மீடியாவில் கலக்கி வருகிறது. தற்பொழுது ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
எனவே தொடர்ந்து ஜெயிலர் அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அதன்படி ஜெயிலர் படத்திற்கான சென்சார் பணிகள் நிறைவடைந்து யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறதாம் படத்தில் ஆக்சன் காட்சிகள் இருப்பதனால் இந்த சர்டிபிகேட் வழங்கப்பட்டு இருப்பதாகவும் நெல்சன் தன்னுடைய வழக்கமான பாணியில் இல்லாமல் ஜெயிலர் படத்தினை ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி உருவாக்கியுள்ளார்.
ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். மேலும் இவர்களை தொடர்ந்து மலையாள நடிகர் மோகன்லால், கன்னட சினிமா நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் பிரபலம் ஜாக்கி ஷெராஃப், சுனில் போன்ற பல மொழியை சார்ந்த பிரபலங்களும் இணைந்து நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. ஜெயிலர் படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று ரிலீஸ்சாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது