சினிமா உலகில் ஒரு நடிகர் அடுத்தடுத்த இடத்திற்கு முன்னேறுவது வழக்கம் அந்த வகையில் தற்போது ரஜினியின் சூப்பர் ஸ்டார் இடத்தை யார் பிடிப்பார் என்று பல்வேறு சர்ச்சைகளும் போட்டிகளும் எழுந்து வருகின்றன அந்த வகையில் சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் ரஜினிக்கு நிகர் வேறு யாருமில்லை அவருக்கு நிகரான நடிகர் என்றால் அது அஜித் தான் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர்.
இதனை சும்மா விடக்கூடாது என்று விஜய் ரசிகர்கள் யார் பெருசு என இணையதளத்தில் மோதிப் பார்க்கலாம் என அஜித் ரசிகர்களுக்கு சவால் விடுத்தனர் இந்த நிலையில் ரசிகர்களின் மனநிலையை புரிந்துகொண்டு பிரபல நாளிதழ் ஒன்று தங்களது சமூக வலைத்தளத்தில் ரஜினிக்கு நிகர் அவர் யார் என்ற கேள்வியை எழுப்பியது.
அதில் 1. ரஜினிக்கு நிகர் ரஜினியே 2.அஜித் 3.விஜய் 4.எவருமில்லை என பதி விடப்பட்டிருந்தது.இதில் கலந்து கொண்ட ரசிகர்கள் கணக்கெடுப்பில் சுமார் 60% பேர் ரஜினிக்கு நிகரானவர் அஜித் என பதிலளித்தனர். நடிகர் விஜய்க்கு 31% வாக்குகள் பதிவாகியது.
மேலும் ரஜினி ரசிகர்களை அதிர வைக்கும் வகையில் வெறும் 4% வாக்குகளை ரஜினிக்கு நிகர் ரஜினி என்ற பதில் தான் பெற்றன இந்த கணக்கெடுப்பின் முடிவுகளை அடுத்து அஜித் ரசிகர்கள் பலரும் ரஜினிக்கு நிகர் மட்டுமல்ல அவருக்கும் மேலானவர் எங்கள் தல அஜித் என கூறி கெத்துக் காட்டிக் கொண்டு வருகின்றனர்.