Thalaiver 170: சமீப காலங்களாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வசூல் ரீதியாக கல்லாகட்டி வரும் நிலையில் தொடர்ந்து மற்ற மொழி டப் படங்களுக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி கர்நாடகாவில் உருவான கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2, மேலும் தெலுங்கில் உருவான பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்த படங்கள் அனைத்துமே 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இவ்வாறு மற்ற மொழி திரைப்படங்கள் இந்த அளவிற்கு வசூல் சாதனை படைத்தாலும் பெரிதாக தமிழ் நடிகர்களின் திரைப்படங்கள் வசூல் செய்வது கிடையாது. அப்படி ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியான நிலையில் இப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது.
இப்படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்ய வேண்டும் என்பதற்காக மோகன்லால், சிவராஜ் குமார் ,சுனில் போன்ற முன்னணி நடிகர்களையும் நடிக்க வைத்தனர். 1000 கொடியை நெருங்கவில்லை என்றாலும் 600 கோடி வசூல் செய்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு லாபத்தை பெற்று தந்தது. இதனை அடுத்து தற்பொழுது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இப்படத்தில் விஜய் நடிப்பதற்காக ரூபாய் 125 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.
எனவே இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என லைக்கா நிறுவனம் நம்பி வருகிறது. ஜெயிலர் படத்தின் வெற்றியினை தொடர்ந்து ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தனது 17வது படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் அதற்கான பூஜை இன்று நடைபெற்றது. சமீபத்தில் விமான நிலையத்தில் பேசிய ரஜினி இது ஒரு பிரம்மாண்டமான படமாக உருவாகும் என கூறியிருந்தார்.
இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 165 கோடிதானாம், அதில் ரஜினியின் சம்பளம் ரூபாய் 90 கோடி மற்றும் மற்ற நடிகர்களின் சம்பளம் ரூபாய் 75 கோடி என கூறப்படுகிறது. மீதமிருக்கும் 30 கோடியில் மட்டுமே இப்படம் உருவாக இருக்கிறது இதனை ரஜினிகாந்த் பிரம்மாண்டமான படம் எனக் கூறியது குறித்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இப்படத்தில் அபிதாப் பச்சன், பகவத் பாஸில், தெலுங்கு நடிகர் ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜய், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் இணைந்து நடிக்க உள்ளனர்.