Actor Raghuvaran: தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரவு என்றால் அது நடிகர் ரகுவரன் தான் தற்பொழுது இவர் இல்லை என்றாலும் இவருடைய நினைவுகள் ரசிகர்கள் மனதில் இன்றளவும் இருந்து வருகிறது. அப்படி இவருடைய நடிப்பு ரசிகர்களை பெரிதளம் கவர்ந்தது பொதுவாக வில்லன்கள் என்றால் முரட்டுத்தனமான கெட்டப்பில் இருப்பார்கள் ஆனால் இதனை மாற்றி அமைத்தது நடிகர் ரகுவரன் தான்.
மிகவும் ஒல்லியான உடல் அமைப்புடனும், மீசை இல்லாமல் சாதுவான முகபாவணையில் அறிமுகமாகி பிறகு தனது நடிப்பினால் வில்லனாக நடித்து அனைவரையும் மிரல வைத்தார். அந்த வகையில் பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனியாக, லவ் டுடே படத்தில் அப்பாவாக மிரட்டி இருந்தார்.
இவ்வாறு சினிமாவில் அற்புதமான கலைஞராக இருந்த இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் விரைவிலேயே அனைவரையும் விட்டு பிரிந்தார். இவருடைய இழப்பு சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அப்படி ரகுவரனின் இறப்பிற்கு பிறகு அவருடைய முன்னாள் மனைவி ரோகினி அவரைப் பற்றி ஏராளமான பேட்டிகள் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து தற்பொழுது முதன்முறையாக ரகுவரனின் அம்மா மற்றும் தம்பி திடீரென சோசியல் மீடியாவில் பேட்டி கொடுத்திருப்பது வைரலாகி வருகிறது. அந்த வகையில் ரகுவரானின் தம்பியை பார்க்கும் பொழுது அச்சு அசலாக ரகுவரனை போலவே உள்ளது மேலும் தற்பொழுது வரையிலும் தனது மகனை நினைத்து ரகுவரனின் அம்மா வருத்தப்பட்டு வருகிறார்.
அந்த வகையில் ரகுவரனின் அம்மா ரஜினிகாந்த் மற்றும் ரகுவரனுக்கு இடையே நல்ல நட்பு இருந்ததாக கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ரகுவரனின் இறுதி மரியாதை நிகழ்ச்சியில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறியிருக்கிறார். உயிர் நண்பனின் மறைவிற்கு ரஜினிகாந்த் செல்லவில்லை என்பதால் அப்போதே இதனை விமர்சனம் செய்து வந்தார்கள்.
ஆனால் உண்மையில் ரகுவரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று பார்த்துள்ளார். ரகுவரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது எனவே அந்த நேரத்தில் மருத்துவமனையில் ரஜினிகாந்த் ரொம்ப நேரம் இருந்தாராம். மேலும் தனது நண்பனை மகா கலைஞனாக நினைத்து விட்டு இந்த நிலைமையில் தன்னால் பார்க்க முடியாது என்ற காரணத்தினால் தான் ரகுவரன் இறப்பிற்கு ரஜினிகாந்த் வரவில்லை என்று கூறியுள்ளார்.