Jailer Success: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிரக்சஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருந்தது. ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் முன்பே ரஜினிகாந்த் இமயமலை சென்ற நிலையில் இரு தினங்களுக்கு முன்புதான் சென்னை வந்தார். எனவே வந்தவுடன் ஜெயிலர் பட குழுவினர்கள் சக்சஸ் பார்ட்டி கொண்டாடியுள்ளனர் அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார், அண்ணாத்த போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியினை சந்தித்த்து இதனால் தனது மார்க்கெட்டை இழந்தார். எனவே வெற்றி திரைப்படத்தினை தந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ரஜினி இருந்து வந்த நிலையில் ஜெயிலர் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
அப்படி இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்களும் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது. ஜெயிலர் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று உலக அளவில் வெளியாகி முதல் வாரம் 375 கோடி ரூபாயும், இரண்டாவது வாரம் 175 கோடி மட்டுமே வசூல் செய்தது. இதனை அடுத்து ஒட்டுமொத்தமாக இதுவரையிலும் 550 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது ஜெயிலர்.
இப்படிப்பட்ட நிலையில் சூப்பர் ஸ்டார் உபி சென்று அம்மாநில முதல்வர் யோகியின் காலில் விழுந்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த சூழலில் ரஜினி சென்னை திரும்பியவுடன் ஜெயிலர் படத்தின் சக்சஸ் பார்ட்டி நடந்துள்ளது. அப்பொழுது ரஜினியுடன் பட குழுவினர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் நெல்சன் உள்ளிட்ட பட குழுவினர்கள் யாருக்கும் பரிசு கொடுக்கவில்லை. விக்ரம் படத்தின் வெற்றிக்காக உலகநாயகன் கமலஹாசன் பிரம்மாண்டமாக பட குழுவினர்கள், செய்தி வாசிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் விருந்து வைத்தார். மேலும் லோகேஷுக்கு கார், உதவி இயக்குனருக்கு பைக் போன்றவற்றையும் கொடுத்து சிறப்பான சம்பவத்தை செய்தார். ஆனால் ஜெயில ர் வெற்றிக்காக நெல்சனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வரையிலும் எதுவும் கொடுக்காதது ரசிகர்கள் மத்தியில் கடுப்பினை ஏற்படுத்தி உள்ளது.