தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்திக். இவர் தனது கெரியரை மணிரத்தினத்திற்கு அசிஸ்டன்ட் டைரக்டராக தொடங்கினார்.
பொதுவாக சினிமாவில் பிரபலமடைந்த பல நடிகர்,நடிகைகள் தங்களது வாரிசுகளை எளிதில் அறிமுகப்படுத்தி பிரபலமடைய செய்துவிடுவார்கள். அந்தவகையில் வாரிசு நடிகர்கள் அல்லது நடிகைகள் பலர் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருவார்கள்.சிலர் பாதியிலேயே காணாமல் போய்விடுவார்கள்.
அந்தவகையில் தனது சிறந்த நடிப்பின் மூலம் சினிமாவில் அசைக்க முடியாத நடிகர்களாக இருப்பவர்கள் சூர்யா மற்றும் கார்த்திக். இவர்கள் தன் அப்பாவான சிவகுமாரின் மூலம் சினிமாவில் எளிதில் பிரபலமடைந்து தங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடித்தார்கள.
அந்த வகையில் கார்த்திக் நடிப்பில் 2007ம் ஆண்டு தமிழில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பருத்திவீரன்.இப்படம் ரிலீசாகி கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு மேல் ஆனாலும் இன்று வரை இப்படத்தை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இது கார்த்தியின் முதல் படமாக இருந்தாலும் அவர் மிகவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இப்படத்தில் முத்தழகு,குட்டி சாக்கு, சித்தப்பா இந்த மூன்று கதாபாத்திரங்களும் இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து காமெடியும் அனைவர் மனதையும் கவர்ந்தது.
இந்நிலையில் ரஜினி பேட்டி ஒன்றில் பருத்திவீரன் திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக பருத்திவீரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கார்த்திக் நடித்த நடிப்பு இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது இன்றைய கார்த்திகை புகழ்ந்து பேசியுள்ளார்.