ஒரு நேரத்தில் தன்னுடைய அழகான நடிப்பு மற்றும் திறமையின் மூலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீபிரியா இவர் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்ததுமட்டுமில்லாமல் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சிவாஜி கணேசன் நடித்த காலத்தில் இருந்தே திரையுலகில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்தவகையில் ஜெய்சங்கர் கமலஹாசன் ரஜினிகாந்த் என பலருடன் ஜோடி போட்டு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பாரபட்சமின்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அந்தவகையில் தமிழ் திரைப்படங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நமது நடிகை தமிழ் சினிமாவில் அவள் ஒரு தொடர் கதை என்ற திரைப்படத்தில் மூலம்தான் அறிமுகமானார் அதன் பிறகு ரஜினி கமலுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் இவருடைய வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது திரைப்படம்தான் அவள் அப்படித்தான் என்ற திரைப்படம் இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்று இருந்தார்.
மேலும் நமது நடிகை பாலச்சந்தர் இயக்கிய திரைப்படம் ஒன்றில் ரஜினிகாந்துடன் நடித்து வந்தார் அப்போது ரஜினிகாந்த் அதிகமாக மது அருந்திய தான் காரணமாக மயக்கம் அடைந்து விட்டார் இதனால் ஸ்ரீபிரியா அவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு அறிவுரை கூறி இருந்தாராம் மேலும் ஸ்ரீபிரியா தான் ரஜினிகாந்தை ஒரு வாரம் மருத்துவமனையில் வைத்து பார்த்துக் கொண்டாராம்.
இதனைத் தொடர்ந்து இருவரும் பல திரைப்படங்களில் ஒன்று இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் ரஜினி சில பழக்கத்தில் இருந்தும் வெளி வந்துவிட்டாராம். தற்போது அவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.