ரஜினிகாந்த் அவர்கள் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் தற்பொழுது ரஜினியின் 171வது படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக லியோ படத்தில் நடித்து வரும் பிரபலம் உறுதி செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் சமீப காலங்களாக இவருடைய நடிப்பில் வெளிவரும் படங்களில் பெரிதாக சுறுசுறுப்பு இல்லாததாக கூறப்படுகிறது.
வயதான காரணத்தினால் சொல்லும் அளவிற்கு இவருடைய படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த வில்லை இருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல சாதனையை படைத்து வருகிறது. இந்நிலையில் ரஜினி நல்ல கதையம்சமுள்ள வெற்றி திரைப்படத்தை தர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ லான்ச் ஜூலை மாதம் நடக்க இருக்கும் நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் இதனை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இது அவரது 170வது படம்.
இந்நிலையில் ரஜினியின் 171வது படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுவே ரஜினியின் கடைசி படம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த தகவல் சமூக வலைதளத்தில் தொடர்ந்து கசித்து வரும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது உள்ளிட்ட இன்னும் சில தகவல் விரைவில் உறுதி செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரஜினியின் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக லியோ படத்தில் நடித்த நடிகரும் பிரபல இயக்குனருமான மிஷ்கின் உறுதி செய்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ் இயக்கம் அடுத்த படம் ரஜினியின் படம் தான் என்று கூறியுள்ளதை அடுத்து தலைவர் 171வது படத்தினை லோகேஷ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதனை அடுத்து லியோ படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய இவர் விஜய் நடித்த யூத் படத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது அவர் வளர்ந்து வரும் ஒரு ஸ்டாராக இருந்தார். இப்பொழுது அவர் இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவர் படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்ற பொழுது என்னை கண்டுபிடித்து வரவேற்றார் அப்பொழுது நான் அவரை ஒரு நட்சத்திரம் போல் பார்க்கவில்லை ஒரு குழந்தையாகவே அவர் எனக் தெரிந்தார் எனக் கூறினார்.