Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது கலவை விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. அப்படி சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் ஜெயிலர்.
இப்படத்திற்கு பிறகு ரஜினி சினிமாவை விட்டு விலகிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனாலும் மீண்டும் ரஜினி தனது 170வது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி தொடர்ந்து ரஜினியை 170வது படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்து வருகின்றனர். ரஜினியின் 170வது படத்தினை இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்க பிஜேபி கேரக்டரில் நாகர்கோவில் ஜில்லாவை கலக்கும் வகையில் ரஜினி நடிக்க இருக்கிறார்.
இவ்வாறு இப்படிப்பட்ட இந்த படத்தில் நான்கு முன்னணி நடிகைகள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி தற்பொழுது வெளியாகியிருக்கும் தகவலின் படி, நடிகை ஈஸ்வரி முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம். இவர் இதற்கு முன்பு ரஜினிக்கு ஜோடியாக காலா படத்தில் நடித்திருந்தார். இரண்டாவது முறையாக இந்த படத்தில் ரஜினி உடன் நடிக்க இருக்கிறார்.
குத்து சண்டை வீராங்கனையாக கலக்கி வரும் நடிகை ரித்விகா சிங் இவரும் தலைவர் 170 படத்தில் கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்ததாக ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பட்டித்தொட்டி அவங்க பிரபலமான துஷாரா விஜயனும் இணைந்துள்ளாராம்.
மேலும் தனுஷ் மற்றும் அஜித்துடன் இணைந்து நடித்த நடிகை மஞ்சு வாரியாரும் ரஜினியுடன் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு இந்த நான்கு நடிகைகளையும் தொடர்ந்து வில்லனாக நடிக்க வைக்க பாகுபலி திரைப்படத்தில் மிரட்டிய ராணா டகுபதியிடம் படக் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். அடுத்ததாக பகத் பாசில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு 72 வயதிலும் கலக்கும் நடிகர் ரஜினிகாந்தின் 170வது படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க போகிறாராம்.