தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் இப்பொழுது கூட தனது ஜெயிலர் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். நமக்கு தெரிந்தது ரஜினி படங்களில் நடித்திருக்கிறார்.
என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் அவர் நடிகர் என்ற அந்தஸ்தையும் தாண்டி ஒரு சில படங்களுக்கு திரைக்கதையும் எழுதி உள்ளார் அது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம். 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வள்ளி. படத்தில் ஹரிராஜ், பிரியா ராமன், வடிவேலு மற்றும் பலர் நடித்திருப்பார்.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் வந்து போய் இருப்பார். இந்த படத்திற்காக கதை, திரை கதையை ரஜினி தான் எழுதினார் இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்தார் இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே வெற்றி பெற்றன. தெலுங்கில் கூட இந்த படம் விஜயா என்ற பெயரில் வெளியானது இந்த படம் வணிகரீதியாக பெரிய வெற்றியை எட்டவில்லை..
இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2002 ஆம் ஆண்டு பாபா என்னும் படத்தில் நடித்து திரைக்கதை, கதை தனது சொந்த தயாரிப்பில் பாபா படத்தை எடுத்திருந்தார். இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்திருந்தாலும் ஆனால் மக்களை பெரிய அளவில் கவர்ந்து இழுக்கவில்லை..
இந்த படம் அப்பொழுது வெளியாகி பெரிய லெவெலுக்கு வசூல் ஈட்ட வில்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது ரஜினி எழுதிய ரெண்டு திரைக்கதையுமே சுமாராக இருந்தது இனி திரைக்கதை பக்கமே வேண்டாம் நடிப்பதில் கவனம் செலுத்தினால் போதும் என முடிவெடுத்து பிறகு நடிப்பதை மட்டுமே சினிமாவில் அவர் ஒரு வேலையாக வைத்து கொண்டாராம்.