Chandramukhi 2 Rajini watch : ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவான திரைப்படம் சந்திரமுகி 2. படம் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து கங்கனா நனாவத், லட்சுமிமேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷி டாங்கே, வடிவேலு, ராதிகா சரத்குமார், ஒய் ஜி மகேந்திரன்..
மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் படத்தில் நடித்திருந்தனர். படத்தின் கதை என்னவென்றால் மொத்த குடும்பமும் குலதெய்வம் கோயிலுக்கு சென்றுள்ளது பூஜை பண்ண வேண்டும் என்ற நோக்கில் போகிறார்கள் ஆனால் சந்திரமுகி அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. கடைசியில் போனார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை..
திரில்லர், ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து இருந்ததால் குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பற்றி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இதுவரை மட்டுமே 10 கோடிக்கு மேல் வசூல் ஆகியுள்ளது. நிச்சயம் சந்திரமுகி 2 படம் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளி நிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இப்படியான சூழ்நிலையில் சந்திரமுகி முதல் பாகத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு ஒரு லெட்டர் ஒன்றை எழுதி உள்ளார் அதில் இருப்பது என்னவென்றால்.. மிகப்பெரிய வெற்றி படமான தன்னுடைய சந்திரமுகியை புதிதாக வேறு ஒரு கோணத்தில் ஒரு பிரம்மாண்ட பொழுது போக்க படமாக சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும்..
நண்பர் பி. வாசு அவர்களுக்கும், அருமையாக நடித்திருக்கும் தம்பி ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். ரஜினி எழுதிய அந்த லெட்டர் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.