ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுக்கும் ரஜினி.. அடுத்த படத்தின் அப்டேட் லீக்

rajini-
rajini-

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோ என்ற பட்டத்தை பெற்று பல வருடங்களாக தக்கவைத்து ஓடிக்கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.
தற்பொழுது இவர் இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உடன் கூட்டணி அமைத்து ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி சிறை துறை உயர் அதிகாரி வேடத்தில் நடிக்கிறாராம்.

அவருடன் கைகோர்த்து மலையாள டாப் ஹீரோ மோகன்லால், கன்னட டாப் ஹீரோ சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், தமன்னா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். ஜெயிலர் திரைப்படத்தில் 30 நிமிட பிளாஷ் பேக் காட்சி உருவாக்கப்பட்டது.

இதை அண்மையில் ரஜினி பார்த்து மிரண்டு விட்டராம் அந்த அற்புதமாக வந்து உள்ளது. அடுத்து எடுக்கப்படும் காட்சி நன்றாக இருப்பதால் ஜெயிலர் படம் மிகப்பெரிய ஒரு வெற்றி பெறும் என படக்குழு நம்பி வேலை பார்த்து வருக்கிறது இதனை தொடர்ந்து ரஜினி லால் சலாம் என்னும் படத்தில் நடிக்கிறார். அதன் பிறகு ரஜினி எந்த இயக்குனருடன் இணைவார் என மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது தற்போது அதற்கான விடையும் கிடைத்துள்ளது.

ரஜினியின் அடுத்த படத்தை ஞானவேல் இயக்க உள்ளார் இவர் இதற்கு முன்பு சூர்யாவை வைத்து “ஜெய் பீம்” என்னும் ஒரு சூப்பர் படத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ரஜினியும், ஞானவேலும் இதையும் திரைப்படத்தின் பிரீ ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இவர்கள் இருவரும் இணையும் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் எனவும் பேசப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ரஜினி போலீஸ் கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது